பிரித்தானியாவில் நடைபெறும் தன்னாட்சி உரிமைப் போராட்டம் ! அனைவரும் அணிதிரள்வோம் .

0
57

பிரித்தானிய மன்னரை நோக்கி மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் தன்னாட்சிக்கான உரிமைக்குரல் என்ற கோசத்துடன் மக்கள் பேரலையுடன் மாபெரும் போராட்டம்!

சிறிலங்காவின் சுதந்திரநாள், தமிழர்களிற்கு கரிநாள்!! 

பிரித்தானிய பேரரசிடமிருந்து சிறிலங்காவிற்கு சுதந்திரம் கிடைத்தது. அன்று முதல் இன்றுவரை எமது தாயகமான தமிழீழ தேசம், சிங்களப் பேரினவாதத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அன்று மறுக்கப்பட்ட நீதி, இன்று வரை மிகப்பெரிய இனஅழிப்பை தமிழினம் சந்தித்து நிற்கிறது. பிரித்தானியா உட்பட உலகின் பல நாடுகளில் தமிழர்கள் ஏதிலிகளாக வாழும் நிலையை உருவாக்கியது. பிறப்பால் சுயநிர்ணய உரிமையை கொண்டுள்ள தமிழீழத் தமிழர்கள் தன்னாட்சி அதிகாரம் இன்றி நாடற்றவர்களாக வாழ்கிறோம். ஏனெனில் எமது மண் சிறிலங்கா பேரினவாத தேசத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. எனவே எமது வலிகளையும் நியாயப்பாடுகளையும், இன்றும் தாயகத்தில் எம்மவர்கள் குரல்வளை நசுக்கப்பட்டு திறந்தவெளிச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளதையும் அனைத்துலக மக்களிற்கும் தெரியப்படுத்துவோம். இப்பேரணியை பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை, அனைத்துலக தமிழ் இளையோர் அமைப்பு, அனைத்துலக இராசதந்திரக் கட்டமைப்பு ஆகிய தமிழ்தேசிய அமைப்புக்கள் இணைந்து ஒழுங்கமைப்பு செய்துள்ளன. எனவே பிரித்தானியாவின் அரண்மனையை நோக்கி பேரணியாக பெப்ரவரி 04 ம் நாள் அனைவரும் பேரலையாக ஓரணியில் அணிதிரள்வோம்.

எமது உரிமைக்குரலை உரத்துக்கூறுவோம்! இனமான உணர்வோடு ஒன்றாகுவோம்….

வென்றாடுவோம்…மாவீரர்களின் கனவை நனவாக்குவோம். தமிழீழ விடுதலை பெறும்வரை ஓயமாட்டோம். தொடர்ந்து போராடுவோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here