தென்கொரியா மீது 200 ஆட்டிலறி எறிகணைகளை ஏவியது வடகொரியா !

0
57

தென்கொரியாவின் இரண்டு தீவுகள் அருகே மீது வடகொரியா தாக்குதல்களை நடத்தியுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை தென்கொரியாவின் இரண்டு தீவுகள் அருகே 200க்கும் மேற்பட்ட ஆட்டிலறி எறிகணைகளை வீசியது. வடகொரியாவின் இச்செயலுக்கு தென்கொரியாவின் பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்தது.

சச்சைக்குரிய தீவின் கடல் எல்லையில் நடத்தப்பட்ட தாக்குதலில் தென்கொரிய இராணுவத்திற்கோ அல்லது பொதுமக்களுக்கோ எந்த சேதமும் ஏற்படவில்லை என்று தென்கொரியாவின் இராணுவம் அறிவித்தது.

வடகொரியாவின் இராணுவ நடவடிக்கையானது கொரிய தீபகற்பத்தில்  பதற்றத்தை அதிகரித்துள்ளது. குறித்த தீவுகளில் வசிப்பவர்கள் அங்கிருந்து வெளியேறுமாறு தென்கொரியாவால் உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது அப்பகுதியில் படகுச் சேவையும் நிறுத்தப்பட்டது.

யோன்பியோங் (Yeonpyeong) தீவில் 2,000 க்கு மேற்பட்ட மக்கள் வாழ்கிறார்கள். இவர்கள் அனைவரும் வெளியேற அதிகாரிகளால் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. பைவ்ங்நியூங் (Baengnyeong) தீவில் 4,900 மக்கள் வாழ்கின்றனர். இவர்களையும் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டில் யோன்பியோங் தீவில் வட கொரிய பீரங்கித் தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டனர்.

இத்தீவுகளை வடகொரியா தங்களுடைய எல்லைப் பகுதி என்று உரிமை கோரிவருகிறது. இப்பதற்றமான சூழலையடுத்து நிதானத்தை கடைப்பிடிக்குமாறு சீனா இருதரப்பையும் வலியுறுத்தியது. மேலும் மோதல்கள் அதிகரிப்பதைத் தவிர்க்கவும் மற்றும் அர்த்தமுள்ள உரையாடலை மீண்டும் தொடங்குவதற்கான நிலைமைகளை உருவாக்கவும் வலியுறுத்தியது.

வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன், அணுசக்தி திறன்கள் உட்பட நாட்டின் இராணுவ ஆயுதக் களஞ்சியத்தை அதிகரிக்க அழுத்தம் கொடுத்துள்ளார், தெற்குடன் மோதல் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்று எச்சரித்திருதார். கடந்த ஆண்டு, பியோங்யாங் பல மேம்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை (ICBMs) சோதித்தது மற்றும் உளவு செயற்கைக்கோளையும் ஏவியமை இங்கே நினைவூட்டத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here