கிளிநொச்சி – பூநகரியில் ரணில் விக்கிரமசிங்கவின் வருகையின் போது முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு தடை விதிக்குமாறு கோரி; தாக்கல் செய்யப்பட்ட மனு, கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பூநகரி பிரதேச செயலகத்தில் ஜனாதிபதியின் பங்குபற்றுதலுடன் கலந்துரையாடல்கள் இன்று (05) மாலை இடம்பெற்றது. இந்நிலையில் பொன்னாவெளி பகுதியில் சீமெந்து நிறுவனமொன்றுக்கு அகழ்வு பணிகளுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவிருந்தது.
இந்நிலையில், ஆர்பாட்டத்தில் பங்கேற்பது தொடர்பில் 10 பேருக்கு எதிராக தடையுத்தரவு பிறப்பிக்குமாறு காவல்துறையால் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்ருந்தது. எனினும் சட்டத்திற்கு விரோதமாக ஆர்பாட்டத்தில் ஈடுபடும் பட்சத்தில், கைது செய்ய முடியுமென நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனையடுத்து போராட்டம் மக்களால் தொடர்ந்து நூறு நாட்களை தாண்யும் போராட்டம் முன்னெடுக்கப்படும் பொன்னாவெளியிலேயே மாலை முன்னெடுக்கப்பட்ருந்தது அதே வேளை ரணில் விக்கிரமசிங்கவின் வருகையின் போதே வவுனியா விமானப்படை தளத்தை புகைப்படம் எடுத்ததாக சந்தேகத்தின் பேரில் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று வவுனியா விமானப்படை தளத்தில் ஜனாதிபதி விசேட விமானத்தில் வருகை தந்து வன்னி அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்தார். இந்நிலையில் பாதுகாப்பு வாகனத்தொடரணி சென்றுகொண்டிருந்த நிலையில் அதனை இளைஞரொருவர் புகைப்படம் எடுத்தமையை அவதானித்த இளைஞனை கைதுசெய்துள்ளனர்.கைதான இளைஞன் பூனாவ பகுதியை சேர்ந்த பைருஸ் பவாஹிர் எனும் முஸ்லீம் ஆவார்.