லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடந்த ட்ரோன் தாக்குதலில் ஹமாஸின் துணைத் தலைவர் சலே அல்-அரூரி உட்பட நான்கு பேரும் கொல்லப்பட்டனர்.
தெற்கு பெய்ரூட் புறநகர் பகுதியில் இஸ்ரேல் நடத்திய டிரோன் தாக்குதலில் ஹமாசின் துணைத் தலைவர் சலே அல் அரூரி கொல்லப்பட்டதாக லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினர் உறுதி செய்துள்ளனர்.
ஹமாசின் இராணுவப் பிரிவை நிறுவியவர்களில் சலே அரூரியும் ஒருவர். சலே அல்-அரூரியை இஸ்ரேல் கொன்றதை ஹமாஸ் பயங்கரவாத அமைப்பும் உறுதிப்படுத்தியுள்ளது. சலே அல்-அரூரியைக் கொன்றதை இஸ்ரேல் இதுவரை உறுதிப்படுத்தவில்லை அதேநேரம் மறுக்கவும் இல்லை. லெபனானின் பிரதமர் இஸ்ரேலை ஒரு பிராந்திய போருக்கு இழுக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார்.