ஈரானின் ஜெனரல் காசிம் சுலைமானி கொல்லப்பட்டதன் நினைவு நாளான இன்று அவரது கல்லறை அருகே குண்டுகள் வெடித்துள்ளன. இக்குண்டு வெடிப்பில் 103 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மேலும் 180 பேர் காயமடைந்தனர் என ஈரான் அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. இரண்டு குண்டுவெடிப்புகளும், பிற்பகல் 3 மணியளவில் நடந்தன. மற்றும் 20 நிமிடங்களுக்குப் பிறகு, தெற்கு ஈரானில் உள்ள கெர்மானில் உள்ள சாஹேப் அல்-ஜமான் மசூதிக்கு அருகில் வெடித்ததாகக் கூறப்படுகிறது.
சுலைமானி இறந்த ஆண்டு நிறைவைக் குறிக்க ஆயிரக்கணக்கான மக்கள் கல்லறை நோக்கி கூடியிருந்தார்கள். இந்த நிலைமையில் குண்டு வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. இரண்டு பைககளில் குண்டுகள் வைக்கப்பட்டு தானியங்கி மூலம் இயக்கி வெடிக்க வைக்கப்பட்டுள்ளது என முதல் கட்டம் தொிய வந்துள்ளது.
1979 புரட்சிக்குப் பிறகு ஈரானிய மண்ணில் நடந்த மிகக் கொடிய தீவிரவாதத் தாக்குதல் என்று கூறப்படுகிறது. குண்டுவெடிப்புகளுக்கு இதுவரை எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை. நாளை வியாழக்கிழமை நாடு முழுவதும் துக்கநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.