வரும் புத்தாண்டு நாளில் நாடு முழுவதிலும் பாதுகாப்பை வழங்க 90 ஆயிரம் காவல்துறை அதிகாரிகளை ரோந்துப் பணியில் ஈடுபடுவர் என பிரான்சின் உள்துறை அமைச்சர் செலின் பெர்தான் தெரிவித்தார்.
பாதுகாப்பு கடமையில் ஈடுபடும் 90 ஆயிரம் காவல்துறையில் 6,000 பேர் பாரிஸில் இருப்பார்கள். அங்கு 1.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் Champs-Elysees இல் கொண்டாட்டங்களில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பிரெஞ்சு உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் கூறினார்.
பாதுகாப்புப் பணியின் ஒரு பகுதியாக ட்ரோன்களை முதன் முறையாக காவல்துறையினர் பயன்படுத்தவுள்ளனர். இதேநேரம் 5 ஆயிரம் தீயணைப்பு வீரர்களும் தயார் நிலையில் இருப்பார்கள்.
பாரிஸில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் 2024 பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுகளை மையமாகக் கொண்டிருக்கும். இதில் டிஜே செட்கள், வானவேடிக்கைகள் மற்றும் ஆர்க் டி ட்ரையம்ஃபில் வீடியோ ப்ரொஜெக்ஷன்கள் ஆகியவை அடங்கும்.
இம்மாதம் 2 ஆம் திகதி ஈபிள் கோபுரத்தின் அருகே ஒரு சுற்றுலாப் பயணி ஒருவர் கத்தியால் குத்தப்பட்டதில் கொல்லப்பட்டது ஒலிம்பிக்கிற்கு முன் இருக்கும் பாதுகாப்புச் சவாலை எடுத்துக்காட்டியது.
கத்தி தாக்குதலானது பிரான்ஸ் மற்றும் வெளிநாடுகளில் ஜூலை 26 ஆம் தேதி தொடங்கும் விளையாட்டுப் போட்டிகளுக்கான பாதுகாப்பு குறித்த கவலையை ஏழு மாதங்களுக்குள் எழுப்பியது.