இயற்கையின் பேரிடரினால் கண்ணீரோடு தண்ணீரில் நின்று கொண்டிருக்கும் எமது மக்களுக்கு உதவுமுகமாக பல்வேறு தாயகக்கட்டமைப்புக்கள் உதவிவருகின்றன. பிரான்சு தமிழ்ப் பெண்கள் அமைப்பினர் கடந்த காலத்திலும் பல்வேறு உதவிகளை செய்து வந்திருந்தனர்.
இந்த தடவைமுல்லைத்தீவு,வட்டவன்,ஈச்சலம்பற்று,சிறனிவாசபுரம், பள்ளிக்குடியிருப்பு, தோப்பூர், தங்கபுரம், விசுவமடு போன்ற இடங்களில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் 200 வரையான எம் உறவுகான, சிறுவர் முதல் பெரியவர்கள், கற்பிணிப்பெண்கள், மாற்றுத்திறனாளிகள், போன்றோர்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் பொதிகளாக வழங்கிவைக்கப்பட்டது.
அவசர வாழ்வாதார உதவியை எதிர்பார்த்து நிற்பவர்களுக்கும் பொருளாதார உதவிகள் பிரான்சு தமிழ்ப் பெண்கள் அமைப்பினரால் வழங்கப்பட்டுள்ளது.