ஆழிப் பேரலையின் கோரத் தாண்டவத்தில் பலியான மக்களின் 19ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு சோதியா கலைக் கல்லூரி மண்டபத்தில் 26.12.2023 மாலை 4.15 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது.
பிரதான பொதுச் சுடரினை தமிழர் புனர்வாழ்வு கழகத் தலைவர் திரு. கோணேஸ்வரன் அவர்களும், ஈகைச் சுடரினை மாவீரர் பணிமனை துணைபொறுப்பாளர் திரு. பாக்கியநாதன் அவர்களும், நினைவுச் சுடரினை தமிழர் வர்த்தக சங்க உப தலைவர் திரு ரூபன் அவர்களும் ஏற்றி வைத்தனர். தொடர்ந்து எமது விடுதலைக்காக போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களையும், போரினாலும் இயற்கை அனர்த்தினாலும் சாவடைந்த மக்களையும் நினைவு கூர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து தமிழ்ச்சங்கப் பிரதிநிதிகள், துறை சார் செயற்பாட்டாளர்கள், கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள், புனர்வாழ்வுக் கழக உறுப்பினர்கள மற்றும் வருகை தந்திருந்த பொதுமக்கள் அனைவரும் ஆழிப் பேரலையினால் சாவடைந்த மக்களுக்கான நினைவுச் சுடரினை ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர்.
தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணிப்பாளர் திரு. சுந்தரவேல் அவர்களின் விளக்க உரையைத் தொடர்ந்து
தமிழர் ஒருங்கிணைப்பு குழு பிரதிநிதி திரு. செல்வகுமார், தமிழர் வர்த்தக சங்க உப தலைவர் திரு ரூபன் மற்றும் உறுப்பினரான திரு. பரமேஸ்வரன் மேலும் தாயக மக்களின் நலனுக்காக செயலாற்றும் அமைப்புக்களின் பிரதிநிதிகளான திரு. செங்கதிர், கலைஞர் திரு. பரா, திரு. சுதன்ராஜ், திரு. வினோத், திருமதி. சுபா, திரு. கொலின்ஸ், திரு. குரூஸ் மற்றும் திரு. விக்டர் ஆகியோர் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.
6 மணிக்கு நிகழ்வு நிறைவுபெற்றது
ஒன்றிணைவோம் சேவை செய்வோம்
தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ்