பிராங்கோ நெவர் தமிழ்ச் சங்கமும் நெவர் தமிழ்ச் சோலையும் இணைந்து கிறிஸ்துமஸ் நிகழ்வினை வழமையான தமிழ்ப் பள்ளி மண்டபத்தில் மாலை 3.30 மணிக்கு வெகு விமரிசையாக கொண்டாடினர்.
முதலில் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் பாலன் பிறப்பு நிகழ்வை நிகழ்த்தி காட்டினர்.பின்னர் தாவீது ஊரிலே.. எனும் பாடலுக்கு இரண்டு சிறார்கள் நடனமாடினார்கள்.உதனை தொடர்ந்து செல்வன் எனும் செல்லம்..எனும் கிறிஸ்துமஸ் பாடலுக்கு மாணவிகள் நடனமாடினர்.
தொடர்ந்து கிறிஸ்துமஸ் அன்பளிப்பு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.அதனை தொடர்ந்து மாவீரர் நினைவு சுமந்த ஓவியப் போட்டியில் பங்குபற்றிய மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.அதன் பின்னர் கிறிஸ்துமஸ் கீதம் ஒலிக்க விடப்பட சிற்றுண்டி வழங்கப்பட்டது. பின்னர் மாலை 5.30 மணிக்கு இனிதே நிறைவு பெற்றது.