இயற்கை ஏற்படுத்திய பேரளிவில் எல்லாம் இழந்து நிற்கின்ற, வடக்கு கிழக்கு மக்களோடு குறிப்பாக ஒட்டிசுட்டான், ஒதியமலை, பழம்பாசி கரம்பிழவு, 17ம் கட்டையில் வாழும் 65 குடும்ப மக்களுக்கு வணங்காமண் அமைப்பினரால் 3000 ஆயிரம் ரூபா பெறுமதியான உலர்உணவுப்பொருட்கள் நேற்றைய தினம் வழங்கப்பட்டிருந்தது. தமிழர் புனர்வாழ்வுக்கழகம் பிரான்சு இவ்உதவிகளை மனிதநேய பணியாளர்களுக்கு வழங்கியிருந்தனர்.
தொடர்ந்து பின்தங்கிய கிராமங்களிலும், எல்லைபுறக்கிராமங்களிலும் வறுமைக்கோட்டில் வாழும் மக்களுக்கும், பெரியவர்கள் முதல் குழந்தைகளுக்கு தேவையான கல்வி, உணவு, வாழ்வாதாரம், விவசாயம், குடும்ப பெண்களுக்களை ஊக்குவிக்கும் செயற்பாடுகள், இடிந்து அழிந்து போன பாடசாலைகள், மலசல கூடங்கள் அமைத்தல், சனசமூகநிலையங்கள் திருத்துதல் போன்ற பணிகளையும், இலவச கல்விகற்பித்தல், விளையாட்டுப்போட்டிகள், பாரம்பரிய விளையாட்டுக்கள், தற்காப்பு கலைகள், மாணவர்களின் உடல், உளவளர்ச்சியை அதிகப்படுத்தும் வகையில் பாடசாலை மாணவர்கள் ஊர் சுற்றுலா போன்ற அவசிய செயற்பாடுகளை முல்லைத்தீவு கிராம அபிவிருத்தி, மாவட்ட அரச அதிபர்களின் ஒத்துழைப்புடன் வணங்காமண் அமைப்பினர் செய்து வருகின்றனர். இதற்கான உதவிகளை பிரான்சில் உள்ள மனிதநேயப்பற்றாளர்கள் தனிப்பட்ட ரீதியிலும், மனிதநேயக் கட்டமைப்புக்களும் உதவிவருகின்றனர்.
நேற்றைய தினம் பிரான்சிலிருந்து தாயகம் சென்ற தமிழ்மாணவர் இயற்கையின் பேரிடரில் துன்பத்தில் நிற்கின்ற பின்தங்கிய கிராமங்களில் உள்ள மக்களை சந்தித்து அவர்களின் குறைகளையும், தேவைகளை அறிந்து கொண்டுள்ளார். தன்னால் முடிந்த உதவிகளையும் செய்து தொடர்ந்தும் பிரான்சுநாட்டுக்கு சென்று எந்தெந்த வழிகளில் தமிழ்மக்களுக்கு உதவமுடியுமோ அதனைச் செய்வதாகவும் மக்களுக்கு தெரிவித்திருந்தார். தன்னால் முடிந்த உதவியையும் உடன் செய்திருந்தார்
ReplyForwardAdd reaction |