டென்மார்க்கில் உனர்வுடன் நினைவு கூறப்பட்ட தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு
கடந்த சனிக்கிழமை வயிலை மற்றும் கொல்பேக் ஆகிய இரு நகரங்களில் எம் தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 17ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு மிகவும் உனர்வோடு நினைவு குறப்பட்டது.
இந் நிகழ்வுகள் வழமையான ஒழுங்கமைப்புடன், எம் தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் திருவுருவப் படத்திற்கு பொதுச்சுடறேற்றி மலர்வணக்கம் மற்றும் அகவணக்கம் செலுத்தப்பட்டதோடு எம் தேசத்தின் குரலுக்கு பொதுமக்காளால் உனர்வோடு ஈகைச்சுடர்கள் ஏற்றப்பட்டது.
அத்தோடு கடந்த சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்களில் கேர்ணீங், பெரடேசியா மற்றும் கொல்போக் ஆகிய நகரங்களில் நடைபெற்ற மாலதி தமிழ்க் கலைக்கூட ஆண்டு விழாக்களிலும் எம் தேசத்தின் குரலின் 17ஆம் ஆண்டு நினைவு எழுச்சியோடு நினைவு கூறப்பட்டது.
மூன்று தசாப்தங்களாக தமிழீழ விடுதலைப் பயணத்தில் தன்னை இணைத்து அரசியல் ரீதியாக இலட்சிய உறுதியோடு பயணித்த பாலா அண்ணா என்றும் எம் மணங்களில் நீங்காது நிலைத்திருப்பார்.