பயங்கரவாதத்திற்கு எதிராக பிரான்சு அரசும் மக்களும் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பிரான்சு வாழ் தமிழ் மக்களும் தமது ஆதரவைத் தெரிவித்து 18.11.2015 புதன்கிழமை பிற்பகல் 15.30 மணிக்கு பாரிசு றிபப்ளிக் குடியரசு சதுக்கத்தில் கூடி பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட அனைத்து மக்களையும் நினைவு கூர்ந்து அஞ்சலி செய்தனர்.
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு – பிரான்சு தமிழீழ மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் பெருமளவான தமிழ் மக்கள் கலந்து சுடர் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தினர்.
பல சர்வதேச நாடுகளின் சின்னங்கள், தேசிய கொடிகள் மற்றும் அடையாளங்களுடன் தமிழீழத் தேசியக் கொடியும் தன்னை அலங்கரித்து ஆதரவு வழங்கிநின்றதைக் காணமுடிந்தது.
இதேவேளை, பாரிசு லாச்சப்பல் பகுதியில் இருந்து பிரான்சு இலங்கை இந்திய தமிழ் வர்த்தக சங்கத்தினர் மலர்கொத்துடன் பதாதையை ஏந்தியவாறு நடையாக வந்து பாரிசு றிபப்ளிக் குடியரசு சதுக்கத்தில் தமிழ் மக்களின் அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டு தமது வணக்கத்தைச் செலுத்தினர்.
பல சர்வதேச ஊடகங்களும் பிரெஞ்சு மக்களும் ஏனை வெளிநாட்டவர்களும் தமிழ் மக்களின் ஆதரவு உணர்வை கண்டு கேட்டுத் தெரிந்துகொண்டனர்.
பெரும் எண்ணிக்கையான சர்வதேச ஊடகங்கள் மற்றும் வெளிநாட்டவர்களின் மத்தியிலேயே குறித்த நிகழ்வு இடம்பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு.
Home
சிறப்பு செய்திகள் பாரிசு றிபப்ளிக் குடியரசு சதுக்கத்தில் உணர்வுடன் கூடிய பிரான்சு வாழ் தமிழர்கள்!