பாரிஸில் பாதுகாப்பு படை நடத்திய துப்பாக்கி சூட்டில் ‘தற்கொலை வெடிகுண்டுடன் இருந்த பெண்தீவிரவாதி உள்பட 3 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
கடந்த வெள்ளிக்கிழமை பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடந்த தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகளையும், அவர்களுடன் தொடர்புடையவர்களையும் தேடும்பணி தீவிரமாக இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் பாரிஸ் புறநகர் பகுதியான செயின்ட்-டெனிஸில் அதிகாலை தீவிரவாதிகளை தேடும் பணியில் பிரான்ஸ் படையினர் ஈடுபட்டனர். அப்போது, மறைந்திருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.
இதனையடுத்து இருதரப்பு இடையே துப்பாக்கி சண்டை ஏற்பட்டது. துப்பாக்கி சண்டையில் பொலிஸ் அதிகாரிகள் சிலர் காயம் அடைந்துள்ளனர்மேலும் பொலிஸ் நாயொன்று சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது. இருதரப்பு இடையே பலத்த சத்தத்துடன் துப்பாக்கி சண்டை நடைபெற்றது.
தீவிரவாதிகள் பதில் தாக்குதல் தொடுத்ததை தொடர்ந்து அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. செயின்ட்-டென்ஸில் நகருடனான இணைப்பு வீதிகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களை வெளியே வரவேண்டாம் என்று பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
தீவிரவாதிகள் பதுங்கியிருந்து துப்பாக்கி சூடு நடத்திய இடத்தை பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்து நடத்திய தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இதன்போது பெண்ணொருவர் படையினரை சுட்டுள்ளதுடன் , பின்னர் தான் அணிந்திருந்த தற்கொலை அங்கியை வெடிக்க வைத்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
தொடர்ந்து அங்கு பாதுகாப்பு படையினர் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் இரண்டு அல்லது மூன்று தீவிரவாதிகளை படையினர் உயிருடன் பிடித்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இத்தாக்குதலில் பிரதான சந்தேகநபர் குறித்த கட்டிடத்தில் இருப்பதாகவும் வேறு சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
Home
உலகச்செய்திகள் பாரிஸில் ஐ.எஸ் இயக்க சந்தேக நபர்கள் சுட்டுக்கொலை: தற்கொலை அங்கியை வெடிக்கச் செய்த பெண் உள்பட...