பிரான்சில்  நடைபெற்ற  தேசத்தின்  குரல்  கலாநிதி  அன்ரன்  பாலசிங்கம்  அவர்களின்  8 வது நினைவேந்தல் நிகழ்வு  

0
298

தமிழீழ  தேசத்தின்  குரல்  கலாநிதி  அன்ரன்  பாலசிங்கம்  அவர்களின்  8வது  ஆண்டு  நினைவேந்தல் நிகழ்வு பிரான்சின் புறநகர் பகுதியில் ஒன்றான நந்தியார் பிரதேசத்தில் 29.12.2014 நினைவு கூரப்பட்டது .

கடற்கரும்புலி  ஈழ வீரனின்  சகோதரர்  ஈகைச்சுடரினை  ஏற்றிவைக்க  அகவணக்கம்  செலுத்தப்பட்டு  மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து பாலா அண்ணனின் பாடலுக்கு செவரோன் தமிழ்ச்சங்க மாணவிநடனம்  வழங்க  தமிழர்  கலைபண்பாட்டுக்கழக  கலைஞர்களின்  விடுதலைக்கானம்  நிகழ்வும்  இடம்  பெற்றன.

திறான்சி  நந்தியார்  தமிழ்சங்க  மாணவர்களின்  நடன  நிகழ்வுகளும்  இடம் பெற்றன.  நிகழ்வில்தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் சார்பாக திரு. விநோச் அவர்கள் சிறப்புரையாற்றியிருந்தார்.

அவர் தனது உரையில் தேசத்தின்குரல் பாலா அண்ணருடைய ராஜதந்திர நகர்வுகள் சிங்களத்தையே கதிகலங்கச்செய்தது என்றும் பல போராளிகள் அவரின் அரசியல் வழிநடத்தலில் உருவாகியிருக்கின்றார்கள்என்றும்  இலங்கை  நடைபெறப்போகின்ற  தேர்தல்  பற்றியும்  எவர்  ஆட்சிக்கு  வந்தாலும்  தமிழர்கள் நாங்களே எமது பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்றும் சிங்களமும் சரி அதனை ஆதரிக்கின்ற அயல்நாடுகளும் சரி இதையே கடைப்பிடிக்கின்றன என்றும் கூறியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பின் பொறுப்பாளர் திரு பாலசுந்தரம் அவர்களும் உரையாற்றியிருந்தார். தாயகத்தில் எமதுமக்கள் இயற்கை அனர்த்தத்தால் படுகின்ற துன்பத்தைப்பற்றியும் அதற்கு உதவிட வேண்டும் என்றும் எதிர்வரும்  மார்ச்  மாதம்  ஜெனீவா  ஐக்கிய  நாடுகள்  சபையின்  மனிதவுரிமைகள்  26  கூட்டத்தொடர்பற்றியும் இந்த வருடமும் ஜெனீவா முருகதாசன் திடலில் தமிழினத்திற்கு நீதி கேட்டு நடைபெறவுள்ளமாபெரும்  பேரணிக்கு  வலுச்சேர்க்க   பிரான்சில்  இருந்து  தொடர்ந்து  பயணம்  1500  பேருடன்செல்லவுள்ளதையும்  அதில்  கணிசமான  அளவு  பிரெஞ்சு  மற்றும்  வெளிநாட்டு  அமைப்புக்களை சேர்ந்தவர்களையும் அழைத்துச்செல்லவுள்ளதையும் இந்தச் செய்தியை எமது மக்களுக்கு பரப்புரை செய்து மக்களை கலந்து கொள்ள வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். நம்புங்கள் தமிழீழம் பாடலுடன் தமிழரின்தாகம் தமிழீழம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.

bala 5 bala 4 bala 3 bala 2 bala 1

bala 10bala 9bala 8bala 7bala 6

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here