பிரான்சில் மீண்டும் வருவோம் படைப்பகம் எழுச்சியோடும் சிறப்போடும் நடாத்திய தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களின் 69 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்.
பிரான்சில் கடந்த 14 ஆண்டுகளாக தேசவிடுதலைப்பணிக்கு பலம் சேர்த்து வரும் மீண்டும் வருவோம் படைப்பகம் 2023 ஆண்டில் தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களின் 69 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தை பாரிசின் புறநகர் பகுதியில் ஒன்றான நந்தியார் பிரதேசத்தில் 09.12.2023 சனிக்கிழமை பிற்பகல் 5;.00 மணிக்கு …… மண்டபத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மாவீரர்களுக்கும், மக்களுக்குமான அகவணக்கம் செய்யப்பட்டு வரவேற்புரையுடன் ஆரம்பமாகியது.
தேசியத்தலைவர் புகழ்சொல்லும் பாடலான மூவேந்தர் வழிவந்த முத்தமிழ்த்தலைவனாம் எங்கள் பிரபாகரன் என்ற பாடலுக்கு ஆதிபராசக்தி மாணவிகள் நடனம் வழங்கியிருந்தனர்.
தொடர்ந்து தேசியத்தலைவர் பற்றிய எழுச்சிப்பேச்சுக்கள், கவிதைகள் பாடல்கள், நாடகங்கள், குறும் படங்கள், தலைவர் பற்றி விவரணங்கள் என்பன இடம்பெற்றிருந்தன. தொடர்ந்து வந்திருந்த குழந்தைகளுடன் மீண்டும் வருவோம் படைப்பகத்தினர் தேசியத்தலைவரின் 69 ஆவது அணிச்சல் ( கேக் ) வெட்டி கொண்டாடி மகிழ்ந்ததுடன் ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்டனர்.
வந்திருந்த மக்களுக்கு வழங்கி மகிழப்பட்டது. நிகழ்வில் சிறப்புரையை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் ஆற்றியிருந்தார்.
தேசிய தலைவர் பற்றியும் தமிழினத்திற்கு ஆயிரம் வருடங்களுக்கு பிறகு கிடைத்த அரிய பொக்கிசம் என்றும் கதைகளில் கேட்டும் படங்களாக பார்த்த ஒட்மொத்தமான வீரத்தையும், மனிதநேயத்தையும், கொண்ட இலட்சியத்தில் கிஞ்சித்தும் குன்றிடாத ஒரு தமிழினத்தலைமகன், பிள்ளையாக,சகோதரனாக, தம்பி, அண்ணன் என்று எல்லாமாகவே வாழ்ந்தவர் எங்கள் தலைவன் அந்த உன்னதத்தை அடுத்த தலைமுறையிடம் எடுத்துச்செல்ல வேண்டும்.
அவ்வாறானதொரு செயல்பாட்டை கடந்த 14 ஆண்டுகளாக செய்து வருபவர்கள் மீண்டும் வருவோம் படைபபகம் என்றும் அவர்கள் எமது மக்களின் சார்பாக பாராட்டைத் கரவொலி மூலம் தெரிவிக்க வைத்தார்.
தொடர்ந்து மீண்டும் வருவோம் படைப்பகத்தால் கலைஞர்கள் மதிப்பளிக்கப்பட்டனர். ஊடகத் துறை, அறிவிப்பாளர், விமர்சகர், திரு. யஸ்ரின் அவர்களும், தமிழர் கலைபண்பாட்டுக்கழக கலைஞர் திரு. சதா வேல்மாறன், தேசியப்பற்றாளர் எழுத்தாளர் திரு. வின்சன், நடன ஆசிரியை திருவாட்டி. ரோணுகா சுரேசு, மனிதநேயச் செயற்பாட்டாளர் திருவாட்டி மேசி செல்வராசா ஆகியோர் மதிப்பளிக்கப்பட்டனர்.
இவ் மதிப்பளித்தலை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர் திரு. மயில் ராசன் அவர்கள் செய்திருந்தார். தொடர்ந்தும் நிகழ்வில் பங்கு கொண்ட கலைஞர்கள், படப்பிடிப்பாளர்கள், நினைவு பொருள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர். நம்புங்கள் தமிழீழம் பாடலுடனும் தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் தாரக மந்திரத்துடன் நிகழ்வு நிறைவுபெற்றது.