கந்தசஷ்டி விரதத்தின் இறுதி நாளான இன்று யாழ். குடாநாட்டில் காணப்படும் முருகன் ஆலயங்கள் பலவற்றில் சூரன் போர் மிக விமர்சையாக நடைபெற்றது.
வடக்கு மாகாணத்திலே புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றான நல்லூர் கந்தன் ஆலயத்திலும் சூரன்போர் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானின் அருளினை வேண்டி நின்றனர்.