யாழ்ப்பாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை வடமாகாண முதலமைச்சர் சென்று பார்வையிட்டுள்ளார்.
வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து முகாங்களில் வாழும் மக்கள் வெள்ளம் காரணமாக தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவில் உள்ள பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களையே முதலமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
முதலமைச்சருடன் வடமாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேரன், உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோர் சென்றிருந்தனர்.
அங்கு சென்ற முதலமைச்சர் மக்களுடைய குறைகளைக் கேட்டறிந்து கொண்டதுடன், பாதிக்கப்பட்டவர்களுடைய விபரங்களையும் திரட்டியுள்ளார்.
இதன் போது தாம் இடம்பெயர்ந்து முகாங்களில் வாழுகின்ற கடந்த 26 வருடமாக எந்தவிதமான தொழில் முயட்சியும் இல்லாமல் தாம் அன்றாடம் கிடைக்கும் கூலி வேலைகளை செய்தே தமது அன்றாட வாழ்க்கைக்கான உணவுத் தேவையினை பூர்த்தி செய்து வந்தோம்.
தற்போது மழை வெள்ளம் காரணமாக கூலி வேலை கிடைப்பதில்லை. இதனால் ஒரு வேளை சாப்பாட்டிற்கே அடுத்தவர்களிடம் கையேந்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அரசாங்கமும் உதவி செய்வதில்லை. நாங்கள் சபிக்கப்பட்டவர்கள் போல் எங்களுடைய வளம் பொருந்திய நிலத்தினை இராணுவத்திடம் பறிகொடுத்துவிட்டு, யாழ்.மாவட்டத்திற்கே உணவினைக் கொடுத்த நாங்கள் இன்று உணவின்றி தவிக்கின்றோம்.
எங்களுடைய நிலம் எமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் எந்த கஸ்ரத்தினையும் பொறுத்துக் கொள்ள நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்றும் முகாம் மக்கள் முதலமைச்சரிடம் கண்ணீருடன் தெரிவித்தனர்.
இச் சந்திப்பின் போது வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் உதவிப் பொருட்களையும் கையளித்திருந்தார்.
Home
சிறப்பு செய்திகள் யாழில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்ட விக்னேஸ்வரன்: உதவிப் பொருட்கள் கையளிப்பு!