கேணல். பரிதி அவர்களின் 11 ஆவது ஆண்டு நினைவுகளுடன் பிரான்சு தமிழ்ப்பெண்கள் அமைப்பால் நடாத்தப்படும் பிரான்சு தேசத்தில் உயர்கல்வி முடித்து பட்டம் பெற்ற மாணவர்களின் மதிப்பளிப்பு நிகழ்வு 02.12.2023 இன்று ஞாயிற்றுக்கிழமை பி.பகல் 4.00மணிக்கு பாரிசின் புறநகர்ப்பகுதியில் ஒன்றான நந்தியார் பிரதேசத்தில் தமிழ்ப்பெண்கள் அமைப்பினால் சிறப்பாக நடாத்தப்பட்டது. நிகழ்வில் பொதுச்சுடரினை பெண்கள் அமைப்பு பொறுப்பாளர். திருவாட்டி. ஜனனி அவர்களால் ஏற்றிவைக்கப்பட்டது.
தொடர்ந்து ஈகைச்சுடரினை கிளிநொச்சி பகுதியில் இந்திய இராணுவத்துடனான மோதலில் வீரமரணத்தை தழுவிக்கொண்ட கப்டன் ரூபன் அவர்களின் சகோதரி ஏற்றி வைத்து, மலர் வணக்கமும் அகவணக்கம் செய்யப்பட்டது.
தொடர்ந்து மாவீரர் பாடலுக்கான நடனம், வரவேற்பு உரை திருவாட்டி ஜனனி அவர்களால் நிகழ்த்தப்பட்டது. தொடர்ந்து முதற்கட்டமாக மதிப்பளிக்கப்பட்டனர். மாணவர்களுக்கான மதிப்பளித்தலை தமிழர் கல்விமேம்பாட்டு பேரவையின் மேலாளர் திருவாட்டி. அரியரட்ணம் நகுலேசுவரி அவர்கள் செய்திருந்தார்.
தொடர்ந்து சிறப்புரையை பரப்புரைப் பொறுப்பாளர் ஆற்றியிருந்தார். தனது உரையில் மாவீரர். கேணல். பரிதி அவர்கள் தனது காலத்தில் கொண்ட விருப்பம் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்படுவதும் அதனை செய்து வரும் தமிழ்ப்பெண்கள் அமைப்பைப் பாராட்டியதுடன். கனவு கண்டவர்கள் இல்லாது போனாலும் கனவு எப்போதும் உயிரோடு இருக்க வேண்டும் என்றும் அதில் இன்று பங்கெடுத்த 18 பிள்ளைகளையும் கடந்த 7 வருடங்களாக மதிப்பளிக்கப்பட்ட நூறு வரையான பிள்ளைகள் இனிவரும் காலங்களில் தங்களின் தமிழீழ தேசத்திற்காக, மொழிக்காகவும், மக்கள் சுதந்திரத்திற்காகவும் பலம் சேர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். தொடர்ந்து ஏனைய 9 பிள்ளைகள் மதிப்பளிக்கப்பட்டனர்.
இவர்கள் முறையே வைத்தியர்கள்,வைத்திய தேதிகள், பொருளியல்,கணக்கியல்,வங்கி உத்தியோகத்தகர்கள் என்று பல்வேறு துறைகளில் பட்டத்தை பெற்றுக்கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மதிப்பளித்த திருவாட்டி.
நகுலேசுவரி அரியரட்ணம் அவர்கள் உரையாற்றினார். அவரும் தனது உரையில் தமிழ்இனத்தின் உன்னத கல்விபற்றியும், எமது வரலாற்றை பிள்ளைகள் அறிந்து கொள்ளவேண்டும் என்று அதற்கு வாசிப்பு மிக முக்கியம் என்றும் கூறியிருந்தார்.
மதிப்பளிப்பு பெற்ற பிள்ளைகளும் தமது சந்தோசத்தைத் தெரிவித்துக்கொள்வதாகவும், பெற்றவர்களுக்கும், இதனை முன்னெடுத்த தமிழ்பெண்கள் அமைப்பையும் பாராட்டினர். நம்புங்கள் தமிழீழம் பாடலுடன் தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் தாரக மந்திரத்துடன் நிகழ்வு நிறைவுபெற்றது.
ReplyForward |
ReplyForward |