உலகமெங்கும் வாழும் தமிழர்களின் தன்னிகரற்ற உணர்வுகளின் எழுச்சிகளாக மண்ணில் மடிந்த மறவர்களை நினைவு கூரும் நாளாகிய கார்திகை 27 இல் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீர ர் நினைவு நாள் .

France நாட்டின் தென்கிழக்கு பிரதேசமாகிய Lyon மாநகரில் ஈழமக்களின் பேராதரவுடன் Franco Lyon Tamil சங்கத்தினரின் ஏற்பாட்டில் 27/11/2023 மாலை மணி ஒலிக்க   மரணித்த  மாவீர்ர்களின் வலி சுமந்த நினைவுகளுடன் இடைவிடாது தொடர்ந்த மழைநடுவிலும்” தாயக கனவுடன் சாவினை தழுவிய சந்தனப் பேழைகளே “என்ற பாடலுடன் பொதுசுடரினை Franco Tamil சங்கதலைவர் ஏற்றிவைத்தார். மாவீர்ர்களின் சகோதர ர், உறவுகள், உற்றார்கள் ஈகைசுடர்களை ஏற்றிவைக்க மக்களின் உணர்வலைகளுடன் கல்லறை பாடல்கள் ஒலிக்க மறைந்த மறவர்களின் நினைவுகளுடன் மலர் வணக்கம் செலுத்தி அஞ்சலி செய்தார்கள்.

தொடர்ந்து நிகழ்வுகள் நடைபெற்றன . 

மாவீர்ர்களின் நினைவு நாள் ஏன் அனுஸ்டிக்கப்படுகின்றது என்ற விளக்கவுரை Lyon Franco Tamil சங்க தலைவரினாலும், மாவீர்ர்களின் வீரம், தியாகம் பற்றிய உரையை Lyon Franco தமிழ் சங்க கல்வி பொறுப்பாளராலும்,சிறப்புரை France Franco Tamil சங்க நிர்வாக அமைப்பாளராலும் நிகழ்த்தப்பட்டது. இடையிடையே 

Lyon தமிழ் சோலை மாணவ மாணவிகளால் நடனங்கள், பேச்சுக்கள், கவியரங்குகள் மாவீர ர்களின்  நினைவுகளை சிறப்பித்தன.ஈற்றில் 

“நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” என்ற பாடலுடன் நிகழ்வுகள் இனிதே நிறைவு பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here