பிராங்கோ நெவர் தமிழ்ச் சங்கமும் நெவர் தமிழ்ச் சோலையும் இணைந்து இன்று தமிழீழத் தேசிய மாவீரர் நினைவேந்தல் நிகழ்வினை Maison de Diocèse 21 Rue Gustave Mathieu,58000 Nevers .எனும் இடத்தில் காலை 11.00 மணிக்கு ஆலய வழிபாட்டுடன் தொடர்ந்து மாலை 1.00 மணிக்கு ஆரம்பமானது.

தொகுப்பாளரால் மாவீரர் நாள் பற்றிய குறிப்பு வழங்கப்பட்டு தொடர்ந்து பிரான்ஸ் இலங்கை ஆன்மீக பங்குத்தந்தை மதன்போல் அவர்கள் பொதுச்சுடரினை ஏற்றி வைத்தார்.அதனை அடுத்து பிரெஞ்சு தேசிய கொடியை வாழிட நாட்டு பங்குத்தந்தை jean Baffeier அவர்கள் அந்நாட்டு தேசிய கீதம் ஒலிக்க ஏற்றி வைத்தார்.

அதனை அடுத்து எமது தமிழீழத்தின் தேசிய கொடியை தமிழீழ தேசிய கீதம் ஒலிக்க பிராங்கோ நெவர் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் பீற்றர் பிறின்சன் அவர்கள் ஏற்றி வைத்தார்.

அடுத்து தமிழீழத் தேசிய தலைவரின் மாவீரர் நாள் உரை ஒலிக்க விடப்பட்டது.அதனை தொடர்ந்து மண்ணுக்குள் மண்ணுக்காய் மாண்ட மாவீரர்களுக்கான மணியோசை ஒலிக்க விடப்பட்டது.பின்னர் அகவணக்கம் இடம்பெற்றது.அதனை தொடர்ந்து மாவீரர் திருவுருவப் படங்களுக்கான ஈகைச்சுடரினை வுனியா புல்மோட்டையில் வீரச்சாவடைந்த லெப்டினன் ராணி மைந்தனின் சகோதரி யூட்கலிஸ்ரா அவர்கள் ஏற்றி வைத்தார்.

தொடர்ந்து கல்லறை பாடல் ஒலிக்க சமநேரத்தில் மக்கள் மாவீரர் திருவுருவப் படங்களுக்கான மலர் மற்றும் சுடர் வணக்கங்களை செலுத்தினர்.

அதனை தொடர்ந்து மாவீரர் நினைவு சுமந்த கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றது.பின்னர் மாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டிகளில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து மக்களுக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டது.பின்னர் மாலை 5.00 மணியளவில் தாரக மந்திரத்துடன் நிறைவு பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here