வீரமே உருவான எம் தமிழீழத் தேசியத்தலைவரின் 69 வது அகவை தின நிழகழ்வினை நெவர் பிராங்கோ தமிழ்ச் சங்கமும் நெவர் தமிழ்ச் சோலையும் இணைந்து சிறப்பாக St Joseph des montôts, 58000 Nevers. எனும் இடத்தில் மாலை 3.00 மணிக்கு வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
பள்ளி சிறார்கள் தலைவனின் அகவை நாள் கட்டிகையை வெட்டினார்கள்.பின்னர் அகவை தின வாழ்த்து கவிதை ஒலிக்க விடப்பட்டது.அதனை தொடர்ந்து பிரபாகரனின் பெயரைச் சொல்லி மீசையை முறுக்கு எனும் எழுச்சி பாடலுக்கு சிறார்கள் நடனமாடினார்கள்.
பின்னர சங்க உறுப்பினர்களில் ஒருவரான அனுசியா அவர்களால் கவிதை வாசிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து மக்களுக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டது.பின்னர் மாலை 5.30 மணிக்கு இனிதே நிறைவு பெற்றது.நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு தலைவரின் நிழற்படம் வழங்கப்பட்டது.