தமிழ்க் கூட்டமைப்பினருடன் பேசி நல்லதொரு தீர்வை வழங்கவேண்டும் மைத்திரியுடனான சந்திப்பில் மன்னார் ஆயர் வலியுறுத்தல்

0
289

rajappu-josep-521dதமிழ் மக்­களின் உணர்­வுகள், எண்­ணங்கள், தேவை­களை அறி­வ­தற்கு தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பினருடனும் வட மாகாண சபையி­னருடனும் கலந்­தா­லோ­சித்து நல்­ல­தொரு அர­சியல் தீர்வை தமிழ்

மக்­க­ளுக்கு வழங்க வேண்டும் என்று எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினரிடம் மன்னார் ஆயர் இரா­யப்பு ஜோசப் ஆண்­ட­கை வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் மக்­களும் மைத்­தி­ரிக்கே

வாக்­க­ளிக்க விருப்பம் கொண்டு இருப்­ப­தா­கவும் அவர் மேலும் தெரிவித்தார்

ஐனா­தி­ப­திக்­கான தேர்தல் பிர­சா­ரத்தை முன்­னிட்டு எதி­ர­ணியின் பொது வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சே­னாவை ஆத­ரித்து நடத்தப்பட்ட தேர்தல் பிர­சா­ரக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மன்­ன­ா­ருக்கு நேற்று செவ்வாய்கிழமை எதிரணித் தலைவர்கள் வந்திருந்தனர்.

ஐனா­தி­பதி வேட்­பாளர் மைத்­தி­ரிபால சிறி­சேன, முன்னாள் அமைச்­சர்களான ரிஷாத் பதி­யுதீன், ராஜிதசேனாரத்ன மற்றும் அமரர் ஐயலத் ெஐய­வர்த்­த­னவின் மகன் வைத்­தி­ய­க­லா­நிதி காபிந்த ெஐய­வர்த்­தன, ரவி கரு­ணா­யக்க எம்.பி. , ஜ.ம.மு.தலைவர் மனோ கணேசன் ஆகியோர் கொண்ட குழு ஆயரை ஆயர் இல்­லத்தில் சந்­தித்­தது.

இந்தச் சந்­திப்பில் இடம்­பெற்ற கருத்­த­மர்வில் அருட்­ப­ணி­யா­ளர்கள் முக்­க­யஸ்­தர்கள் கலந்து கொண்­ட­போதும் ஊட­க­வி­ய­லார்கள் உட்­செல்ல அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை.

இருந்­த­போதும் இவர்­களின் சந்­திப்பைத் தொடர்ந்து மன்னார் ஆயர் இரா­யப்பு யோசேப் ஆண்­டகை ஊட­கங்­க­ளுக்கு தெரிவித்ததாவது்

ஐனா­தி­பதி தோ்தலில் பங்கு பற்­று­கின்ற மைத்­தி­ரி­பால சிறி­சேனா அவர்­களின் கட்­சியினரும் அவர்­களின் உத­வி­யா­ளர்­களும் இங்கு வந்­தார்கள் இதன் நோக்கம் என்­ன­வென்றால் தமிழ் மக்­களின் ஆதங்­களை அறிந்து கொள்­வ­தற்­கா­கவேயாகும்.

ஏனென்றால் அவர்கள் கூட்டம் வைக்­கும்­போது தமிழ் மக்­களின் கருத்­துக்­களைப் பெறு­வ­தற்கு அவர்­க­ளுக்கு நேரம் இன்­மை­யாலும் அத்­துடன் அவர்கள் தங்கள் கருத்­தக்­களை சொல்லி விட்டு சென்று விடு­வார்கள் என்­பதால் என்­னுடன் பேசு­வ­தற்­காக இங்கு வருகை தந்­தி­ருந்­தார்கள்.

அவர்­க­ளுடன் மக்­களின் முக்­கியப் பிரச்­ச­னை­களை பிறகு பேசித் தீர்த்துக் கொள்­ளளாம். இருந்தும் அதைப்­பற்றி பேச­வேண்­டிய விடயங்கள் தொடர்பில் நாங்கள் கலந்துரையாடினோம்.

இந்த நாடு பல இனங்கள் கொண்ட நாடு அத்­துடன் பல சம­யங்கள் கொண்ட நாடு ஆனால் ஒரே மக்கள் ஒரே நாடு என்று சொல்லிக் கொண்டு இருக்­கின்ற இந்த ஆட்­சியில் துன்­பங்­களை தாங்கிக் கொண்­டி­ருக்கும் தமிழ் மக்­களின் கருத்­துக்கள் அவர்­களின் சிந்­த­னை­க­ளுக்கு வரு­வ­தில்லை.

மாறாக தமிழ் மக்­க­ளுக்­கான எதிர்ப்பு உணர்­வு­க­ளையே இந்த அர­சி­ட­மி­ருந்து நாங்கள் சந்­தித்­துள்ளோம். அத்­துடன் இவ்­வா­றான இடர்­களை கேட்­ட­றிந்து நிவர்த்தி செய்ய எவரும் முன்­வ­ர­வில்லை.

தமிழ் மக்­க­ளுக்கு உதவி செய்தால் சிங்­கள மக்கள் தங்­க­ளுக்கு நெருக்­க­டி­களை கொடுப்­பார்கள் என ஒரு மாயையில் அவர்கள் சிக்­குண்டு இருந்­தார்கள். தழிழ் மக்­களும் சிங்­கள மக்­களும் ஒரே நாட்டு மக்கள் அனை­வரும் சம­ர­ச­மாக ஒன்று பட்டு வாழ­வேண்­டி­ய­வர்கள் அப்­ப­டித்தான் நாங்கள் இப்­பொ­ழுதும் வாழ்ந்து கொண்டு இருக்­கின்றோம்.

ஆனால் சிங்­களப் பகு­தி­களில் தமிழ் மக்­க­ளைப்­பற்றி தவ­றான எண்ணக் கருத்­துக்­க­ளையும் சிந்­த­னை­க­ளையும் சிங்­கள மக்­க­ளிடம் அர­சி­யல்­வா­தி­கள் வழங்கிவருகின்றனர்.

ஆனால் தமிழ் மக்கள் அவ்­வாறு சிந்­திக்­க­வில்லை ஏனென்றால் ஒரு துன்பம் நேரு­டு­மாகில் அது தமிழ் மக்­க­ளுக்கும் சிங்­கள மக்­க­ளுக்கும் ஒன்­றுதான்.

ஆகவே இந்த ஒரே நாட்­டி­லுள்ள அரசில் பிரச்­ச­னை­களை தீர்த்து வைக்­கப்­பட வேண்டும். தமிழ் ஈழத்தை தவிர தமிழ் மக்­க­ளுக்கு எல்லாம் தருவேன் என இவ் அர­சியல் வாதிகள் சொல்­லிக்­கொண்டு இருந்­தார்கள் ஆனால் எங்­க­ளுக்கு ஒன்றும் தர­வில்லை எங்­க­ளுக்கு ஈழம் தேவை­யில்லை மாறாக நாங்கள் சுய மரி­யா­தை­யோடு வாழும் மக்­க­ளாக இருக்க வேண்டும்.

ஆகவே பல இனம் மொழி சமயம் கொண்ட இந்த நாட்டில் தமிழ் மக்கள் அறு­பது நூறு ஆண்­டு­க­ளுக்கு மேலாக தங்கள் உரி­மை­களை அர­சியல் ரீதி­யா­கவும் அகிம்சை வழி­யாக கேட்டுக் கொண்டு இருக்­கின்­றார்கள் ஆனால் இவைகள் எல்லாம் ஆயு­தங்கள் கொண்டு நசுக்­கப்­பட்­ட­தொ­ழிய வேறு எந்த பயனும் கிடைக்­க­வில்லை.

இத­னால்தான் தமிழ் மக்­களும் சிங்­கள மக்­களும் அனை­வரும் ஒன்­றி­னைந்து நாட்டை நல் வழியில் கொண்டு செல்­வ­தற்கு அர­சியல் தீர்வு மூலம் பிரச்­சை­னைகள் தீர்க்­கப்­பட வேண்டும் என நாங்கள் முனைந்தோம்.

இந்த நாடு இயற்­கை­யிலே ஒரு அழ­கான நாடு இது இறைவன் எமக்கு தந்த பெருங்­கொடை ஆனால் மனி­தர்­களோ இவற்­றையும் மனி­தத்­தையும் அழிப்­ப­தி­லேதான் முனைந்து கொண்டு இருக்­கின்­றார்கள். ஆக­வேதான் இதில் மாற்றம் பெற்று ஒரு புதிய நாடாக ஓர் அழ­கான இலங்­கை­யாக இருக்க வேண்டும்.

இதைத்தான் நாங்கள் அடிக்­கடி சொல்லிக் கொண்டு வரு­கின்றோம். தமிழ் மக்­க­ளுக்கு நீண்ட காலப் பிரச்­ச­னைகள் இருக்­கின்­றன இதைப்­பற்றி நாம் சிந்­திக்கத் தேவை­யில்லை என அர­சில்­வா­திகள் இருக்க முடி­யாது அதைக் கேட்­ப­வர்­க­ளையும் அவர்கள் தண்­டிக்க முடி­யாது இவற்றைக் கேட்­ப­வர்கள் தமிழ் பகு­தி­யில்தான் இருக்­கின்­றார்கள் எனவும் சொல்ல முடி­யாது.

தமிழ் மக்­க­ளுக்கு ஒரு அர­சியல் தீர்வு வழங்­கப்­பட வேண்டும் ஆகவே தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பு­டனும் வட மாகாண சபை­யி­டனும் பேச்சு வார்த்தை நடத்­தும்­போ­துதான் அவர்கள் தமிழ் மக்­களின் பிரச்­ச­னை­களை முன்­கொண்டு வரு­வார்கள் அப்­பொ­ழுது எல்­லோரும் ஒன்­றி­னைந்து ஒரு தீர்வை பெற­மு­டியும் என்­றுதான் பேசினோம்

இப்­ப­டி­யான காரியம் செய்­யப்­ப­டு­மாகில் அநீ­தி­களோ மக்கள் புறக்­க­ணிப்போ இந்த நாட்டில் ஏற்­ப­டாது. மேலும் இந்த நாட்டில் போரினால் பாதிக்­கப்­பட்ட மக்கள் வித­வைகள் உடலில் காயத்­து­டனும் குண்­டு­க­ளு­டனும் இன்னும் மன அழுத்­தத்­துடன் இருக்கும் மக்­க­ளுக்கு எவ்­வித நிவா­ர­ணமும் வழங்­கப்­ப­ட­வில்லை

இதனை ஏன் இவர்கள் கவ­னத்­துக்கு எடுக்­கப்­ப­ட­வில்­லை­யென்றால் தமி­ழர்­களின் வாக்­குகள் தங்­க­ளுக்கு தேவைப்­ப­டாது என்ற கார­ணமேயாகும்.

ஆனால் தற்­பொ­ழுது எதி­ர­ணியில் போட்­டிடும் அமைப்பு அதன் வேட்­பாளர் ஒரு பரந்த மனப்­பாங்­குடன் மட்­டு­மல்ல அவற்றை நல்ல செயல்­பாட்டில் செயற்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்­ட­போது அவர்­களும் அதே மனப்­பாங்­குடன் இருப்­ப­தா­கவும் தெரிவித்தார்.

அத்துடன் இவர்களின் செயல்பாட்டிலும் விஞ்ஞாபனத்திலும் இவர்களின் நல் எண்ணங்கள் இருப்பதையும் எம் மக்கள் நன்கு அறிவார்கள் ஆகவே எமது தமிழ் மக்கள் எதிரணி பொது வேட்பாளருக்கு வாக்களிக்க இருக்கின்றனர்.

ஆகவே இவர்களின் நல்லெண்ணங்கள் செயல்பாடுகள் நல்ல முறையில் நடைபெற வாழ்த்தியதுடன் இந்த நாட்டில் ஒற்றுமையும் சமாதானமும் திகழ வாழ்த்தி அனுப்பினேன் என மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு யோசேப் ஆண்டகை தெரிவித்தார்

ஆயருடன் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி ஏ.விக்ரர் சோசை அடிகளாரும் கூட இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here