தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு யாழ்ப்பாணத்தில் உள்ள ஐநா கிளை அலுவலகம் முன்பாக இன்று திங்கட்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்.கோவில் வீதியில் உள்ள அலுவலகத்திற்கு முன்பாக இன்று காலை 10 மணிக்கு அரசியல் கைதிகளின் உறவினர்களால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அந்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் முகமாக தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் , பத்மினி சிதம்பரநாதன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.