மலர் வணக்க அஞ்சலி !
வெள்ளிக்கிழமை(13/11/15) பிரான்சில் இடம்பெற்ற பயங்கரவாதிகளின் தாக்குதல்களால் 128 அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டும் 300 க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்தும் 80 பேர் வரையிலானவர்களின் நிலைமை கவலைக்கிடம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. உலகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ள இத்தாக்குதல்கள் தமிழர்களாகிய எம்மையும் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.பாதிப்புற்ற மக்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பயங்கரவாதத்திற்கு எதிராக பிரான்சு அரசும் மக்களும் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பிரான்சு வாழ் தமிழ் மக்களும் உலகத் தமிழர்களும் உற்ற துணையாக தோளொடு தோள் நிற்பார்கள் என்பதையும் உறுதியாகத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
புதன் கிழமை 18-12-2015 மாலை 15 h 30 மணிக்கு குடியரசு சதுக்கத்தில் கூடி பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட அனைத்து மக்களை நினைவு கூருவோம்.
வரும் புதன் கிழமை 18-12-2015 மாலை 15 H 30 மணிக்கு தமிழ் மக்கள் ஆகிய நாங்கள் அனைவரும் République மெட்ரோ (Ligne 5-8-9) வில் அமைந்துள்ள குடியரசு சதுக்கத்தில் ஒன்று கூடும் படி கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்புகளுக்கு : தமிழர் ஒருங்கிணைப்பு குழு பிரான்சு – தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு – 06 52 72 58 67 – 06 59 99 46 08