தமிழீழ தேசிய மாவீரர்நாள் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தனது அனைத்துக்கட்டமைப்புகளுடன் தமிழீழ தேசிய மாவீரர்நாள் எழுச்சி பூர்வமாக 27.11.2023 இன்று சிறப்புடனும் எழுச்சி பூர்வமாகவும் நினைவு கூரப்பட்டது. பாரிசின் புறநகர் பகுதியான ஒபவில்லியே நகரத்தில் அமைந்துள்ள லெப். கேணல் நாதன், கப்டன் கஜன், கேணல் பரிதி ஆகியோரின் துயிலுமில்லம் முன்பாகவும், சார்சல் 95 ( மாவட்டத்தில் ) தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் முதற்களப்பலியான லெப். சங்கர் அவர்களின் நினைவுக்கல்லின் முன்பாகவும், கடற்புலிகளின் நினைவாக செவரோன் நகரத்திலும், 1300 மாவீரர்களின் திருவுருவப்படங்கள் வைக்கப்பட்ட மசிபலெஸ் என்னும் இடத்தில் பெரிய மண்டபத்திலும், பிரான்சின் ஏனைய 11 மாவட்டங்களிலும் தேசிய மாவீரர்நாள் எழுச்சிபூர்வமாக நினைவு கூரப்பட்டது.
ஒபவில்லியே லெப். கேணல். நாதன், கப்டன் கயன் துயிலுமில்லத்தில் பொதுச்சுடரினை கனி பிராங்கோ தமிழ்ச்சங்கத்தலைவர் திரு. தேவா அவர்கள் ஏற்றி வைக்க கப்டன். கயன் அவர்களின் சகோதரர்கள் ஈகைச்சுடரினை ஏற்றி வைத்தனர்.
கேணல். பரிதி துயிலுமில்லத்தில் பொதுச்சுடரினை செல் சங்கத்தின் தலைவர் திரு. சுரேஸ் அவர்கள் ஏற்றி வைக்க ,ஈகைச்சுடரினை மாவீரர் வீரவேங்கை சின்னவீரனின் தாயார் அவர்கள் ஈகைச்சுடரினை ஏற்றி வைத்தனர். தொடர்ந்து மக்கள் காந்தள் மலர்கொண்டும் ஈகைச்சுடர் ஏற்றி அகவணக்கம் செய்திருந்தனர்.
மஸ்சிபலெஸ் மண்டபத்தில் பொதுச்சுடரினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு உப தலைவர் திரு. பரா அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக்கொடியை கடற்கரும்புலி. மேஜர். ஈழவீரனின் சகோதரர் அவர்கள் ஏற்றி வைத்திருந்தார். மாவீரர் நினைவு சுமந்து ஈகைப் பெரும்;சுடரினை 1984 ஆம் ஆண்டு பொலிகண்டிப் பகுதியி சிங்கள இராணுவத்தின் சுற்றிவளைப்பில் அமைப்பின் ரகசியம் காக்க முதன்முதலில் சனையிட் உட்கொண்டு வீரமரணத்தைத் தழுவிக் கொண்ட வீரவேங்கை பகின் ( செல்வன்) அவர்களுடைய சகோதரி அவர்கள் ஏற்றி வைக்க. அனைத்து மாவீரர் பெற்றோர்கள் சகோதரர்கள் தமது பிள்ளைகளின் திருவுருவப்படங்களுக்கு சுடர் ஏற்றி வைக்க மாவீரர் பாடல் ஒலிபரப்பாகியது. தொடர்ந்து மலர் வணக்கத்தை 29.112008 ஆனையிறவு வடபோர் முனை கண்டல் பகுதியில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் தமிழ் இன்பனின் தாயாரும், 05.06.2000 ல் சுண்டிக்குளம் கடற்பரப்பில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்புலி. மேஜர். மணிவண்ணனின் சகோதரி துயிலுமில்ல மாவீரர் நினைவுப்பீடத்திற்கும் தாயகத்திலிருந்து கொண்டு வரப்பட்டிருந்த மாவீரர் துயிலுமில்ல கல்லிற்கும், மண்ணிற்கும் முன்பாகவும் ஒளியேற்றி வைத்தனர்.
தொடர்ந்து அகவணக்கம் இடம் பெற்றது. நிகழ்வில் கலைபண்பாட்டுக்கழகத்தால் நவம்பர் மாதம் நடாத்தப்பட்ட மாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டியில் பங்கு பற்றி முதலாம் இடங்களைப் பெற்றுக்கொண்டவர் தமது பேச்சுக்களை அவ்வப்போது பேச, மாவீரர்கள் நினைவு சுமந்த பாடல்களை கலைபண்பாட்டுக்கழக கலைஞர்கள் வழங்கியிருந்தனர், தொடர்ந்து மாவிரர் நினைவுப்பாடல்கள், எழுச்சிப்பாடல்களுக்கான நடனங்கள் மாணவ மாணவிகளால் வழங்கப்பட்டது. அனைத்துலகத்தால் வெளியிடப்பட்ட மாவீரம் பேசும் காற்று இறுவெட்டும், தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் பிரான்சு வெளியிட்ட விலைபோகாத வீரம் இறுவெட்டும் வெளியிட்டு வைக்கப்பட்டது. தொடர்ந்து மாவீரர் நாள் சிறப்புரையை தமிழீழ மக்கள் பேரவைப் பேச்சாளர் திரு. மோகனதாசன் அவர்கள் ஆற்றியிருந்தார். இவிறி சூசென் முந்நாள் அரசியல் ஆலோசகர் டேவிட் போவே அவர்கள் உரையாற்றியிருந்தார்.
மாவீரர்நாள் கலைத்திறன் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும், தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகத்தால் நடாத்தப்பட்ட மாவீரர் நினைவு சுமந்த தாயக வரலாற்றுத்திறன் போட்டிகளில் அதிகமான பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களும் மாவீரர் பெற்றோர் சகோதரர்களாலும், பிராங்கோ தமிழ்சங்கத் தலைவர்களாலும் மதிப்பளிக்கப்பட்டனர். தமிழர் கலைபண்பாட்டுக் கழகத்தினரால் உருவாக்கம் செய்யப்பட்ட கல்லறைக்கவிதைகள் என்னும் நாடகம் நடைபெற்றது.
தாயகத்திலே மாவீரர்கள் துயிலுமில்லங்களில் எவ்வாறு அந்தப் புனிதர்களின் நினைவுகளை தாங்கி எமது மக்கள் நின்றார்களோ அதோபோல இங்கும் உணர்வுடன் தங்கள் பிள்ளைகள், பெரியவர்கள், இளையவர்கள் வந்து கலந்து உணர்வு மேலிட்டவர்களாய் நின்றிருந்தனர். மண்டபத்திலும், மாவீரர் துயிலுமில்லங்கள் நிறுவப்பட்டதோடு தேசியக் கொடிகளுடன் எழுச்சி நிறங்களான மஞ்சள், சிவப்பு கொடிகளுடன் எழுச்சிபூர்வமாக காணப்பட்டன. காலநிலை மாற்றத்தினால் நாள் முழுதும் அடைமழைக்கு மத்தியிலும், நீண்டதூரம், வாகனங்களிலும், பேரூந்துகளிலும், தொடரூந்திலும் வந்து பெருமளவில் கலந்து கொண்டு அந்த உன்னத மாவீரர்களுக்கு தமது வரலாற் றுக்கடமையை எமது மக்கள் செய்திருந்தனர்.
சம நேரத்தில் பிரான்சின் 95 ஆம் மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் முதற்கள மாவீரன் லெப். சங்கர் அவர்களின் நினைவுக்கல்லின் முன்பாக பிரான்சு நாட்டினதும் மற்றும் தமிழீழ தேசியக் கொடியும் ஏற்றி வைக்கப்பட்டது. பொதுச்சுடரினை கார்லே கோணேஸ் முதல்வர் ஏற்றி வைக்க, பிரெஞ்சு தேசியக் கொடியை கார்லே கோணேஸ் முதல்வர். பற்றிக் கடாட் Patrick Kaddat அவர்கள் ஏற்றி வைக்க, தமிழீழத் தேசியக் கொடியை மாவீரரின் சகோதரரும், சார்சல் பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் தலைவருமாகிய திரு. மத்தியாஸ் டக்லஸ் அவர்கள் ஏற்றி வைத்திருந்தார். மாவீரர் நினைவுரைகளை மாநகர முதல் Monsieur le Maire Patrick Kaddat அவர்கள், முதல்வர் Benoit Jimenez Viller Lr Bel ஆலோசகர் Cedric Sabouret முந்நாள் பாராளுமன்ற உறுப்பினர் Francois Pupponi தமிழீழ மக்கள் பேரவை திரு. திருச்சோதி அவர்களும் உரையாற்றியிருந்தனர். பிரான்சின் கடற்புலிகளால் நடாத்தப்பட்ட நிகழ்விலும் கடற்புலிகள் உறுப்பினர்கள் தமது உன்னத மாவீரர்களுக்கு உணர்வு பூர்வமாக தமது நினைவு வணக்கத்தை உணர்வு மேலிட செய்திருந்தனர்.
பிரான்சின் அனைத்து இடங்களிலும் 09 மாவட்டங்களில் அங்கு வாழும் தமிழீழ மக்கள் தமது இதய தெய்வங்களான மாவீரர்களுக்கு செய்திருந்தனர்.
ReplyForward |