17 நவம்பர் 2023, பிரெஞ்சு பாராளுமன்றத்தில் – பிரான்சு – சிறீலங்கா நாடுரீதியான நட்பு அமைப்பின் பாராளுமன்ற உறுப்பினார் திருமதி Soumiya Bouchara தலைமையில் பிரான்சு தமிழ் மக்கள் உரிமை பாதுகாப்பு அமைப்பினரின் துணையுடன்- சந்திப்ப நடைபெற்றது.
சிறீலங்காவில் போர் முடிந்து 14 வருடங்கள் கடந்த பின்பும், மனிதவுரிமை அமைப்பின் பிரேரணைகளை மறுதலித்து கொண்டிருக்கும் சிறீ லங்கா அரசினூடாக எந்தவித நீதிக்கான விசாரணை நடைபெற முடியாது என்பதையும், சர்வதேச விசாரணை ஒன்றே சிறீ லங்காவில் தமிழருக்கான அரசியல் தீர்வை பெற்று கொடுக்க முடியும் என்ற செய்திகள் ஊடாக ஒரு சந்திப்பு நடைபெற்றது. பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற
இன்றைய சந்திப்பில் இதர பாரளுமன்ற உறுப்பினரின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு தகவல்களை பெற்று சென்றது குறிப்பிடத்தக்கது. அத்துடன் 2006 ல் இருந்து தமிழ் மக்களுக்கு உறுதுணையாக பிரான்சு , தமிழ் மக்களுக்கான பாராளுமன்ற குழுவை உருவாக்கி இன்று எம்முடன் துணையாக இருக்கும் , பிரான்சின் முன்னாள் அமைச்சர் திருமதி Marie George Buffet கலந்து கொண்டு, எமக்கான தொடர்ச்சியான ஆதரவை தந்தார், என்பது குறிப்பிடவேண்டும்.
இந்த நிகழ்வில் பிரன்சு நாட்டுக்கு இளம் வயதில் வந்து குடியேறி இன்று வளர்த்து வரும் அடுத்த இளைய சமுதாயத்தினரும், பிரான்சில் பிறந்து இன்று பல துறைகளில் முன்னிலை வகிக்கும் இளைஞர்களை முன்னிலை படுத்தி நடத்திய இன்றைய சந்திப்பு – நாளை தமிழருக்கு நம்பிக்கையான எதிர்காலம் இருப்பதாகவே காட்டியது.
இன்று இந்த சந்திப்பில், நாம் சரியான முறையில் எமது விடயங்களை எடுத்து செல்லும் போது, எமக்கு நடைபெற்ற தமிழினப்படுகொலைக்கும் நடந்து கொண்டுருக்கும் இனப்படுகொலைக்கும், ஒரு அரசியல் தீர்வை பெற்றுக்கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை இன்றைய சந்திப்பு தந்திருந்தது.