கேணல் பரிதி அவர்களின் 11ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு அவரின் பூதவுடல் விதைக்கப்பட்ட ஒபவில்லியே துயிலும் இல்லத்தில் நடைபெற்றது. பொதுச்சுடரினை மாவீரர் பணிமனைப்பொறுப்பாளர் ஏற்றிவைக்க, ஈகைச்சுடரினை மாவீரர். கேணல். பரிதி அவர்களின் தாயார் ஏற்றிவைக்க, மலர்மாலையை அவரின் சகோதரர்கள் அணிவித்தனர்.
அகவணக்கம் செலுத்தப்பட்டு பொதுமக்கள் மலர் வணக்கமும் சுடர் வணக்கமும் செய்திருந்தனர். மாவீரர் நினைவுரையை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் ஆற்றியிருந்தார். தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் வணக்க நிகழ்வு நிறைவுபெற்றது.