பிரான்சில் நடைபெற்ற திருக்குறள் திறன் போட்டி 2023!

0
196

பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகம் ஆண்டு தோறும் நடாத்தும் திருக்குறள் திறன் இறுதிப் போட்டி, பாரிசின் புறநகரான  கொலம்பஸ் நகரத்தில் 05.11.2023 ஞாயிற்றுக்கிழமை  9.31 மணிக்கு அகவணக்கத்துடனும், தமிழ்ச்சோலைக்கீதத்துடனும் தொடங்கியது. கடந்த ஒக்ரோபர் மாதம் திணைக்கள மட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவர்கள் இந்த இறுதிப்போட்டியில் பங்குபற்றியிருந்தனர். 

 அதிபாலர் பிரிவு, பாலர் பிரிவு, கீழ்ப்பிரிவு, நடுவண்பிரிவு அ -ஆ, மேற்பிரிவு அ -ஆ, உயர்பிரிவு, அதிஉயர்பிரிவு  ஆகிய ஒன்பது பிரிவுகளின் வெற்றியாளர் இப்போட்டிகளூடு தெரிவுசெய்யப்பட்டனர்.  போட்டிகளின் நடுவர்களாக திருவாட்டி உதயராணி திருச்செல்வம் – இளங்கலைமாணி , ஆசிரியர்ப் பயிற்றுநர், தமிழ்ச்சோலை தமிழியல் பட்டக விரிவுரையாளர், திருவாட்டி, நித்தியதாஸ் துசியந்தி சுதாகர் – இளங்கலைமாணி மற்றும்  அரசியல் கல்வி (யாழ் பல்கலைக்கழகம்)  சட்டத்துறை மாணவர் (Cergy பல்கலைக்கழகம்)  மற்றும் திருமிகு. இரா சதீஸ்வரன்- இளங்கலைமாணி, கவிஞர், பாடலாசரியர்,  ஆகியோர் கடமையாற்றினர். 

ஊடகப்பிரிவு, மக்கள் தொடர்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here