மேற்கு நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 150க்கு மேற்பட்டடோர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் ஜாஜர்கோட் மருத்துவமனை எடுத்துச் செல்லப்பட்டனர்.
காத்மாண்டுவிற்கு மேற்கே 500 கிமீ (310 மைல்) தொலைவில் உள்ள ஜஜர்கோட் மற்றும் மேற்கு ருகும் ஆகிய மாவட்டங்களில் மீட்புப் பணிகளுக்கு உதவ பாதுகாப்புப் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
நிலநடுக்கம் ஏற்பட்ட ஒரு மணி நேரத்தில் மேலும் மூன்று அதிர்வுகள் உணரப்பட்டன. மேலும் நிலநடுக்கம் ஏற்பட்டு வீடுகள் சேதமடையும் என்ற அச்சம் காரணமாக பலர் இரவு முழுவதும் திறந்த வெளியில் கழித்தனர்.
ஆனால் நிலநடுக்கத்தால் தூண்டப்பட்ட நிலச்சரிவுகளால் சாலைகள் துண்டிக்கப்படுவதால் அந்த தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தடைபட்டுள்ளன.