தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சு, தமிழர் வர்தக சங்கம் பிரான்சும் எதிர்காலத்தில் இணைந்து செயற்படுவது தொடர்பாக சந்தித்து கலந்துரையாடப்பட்டது.
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சு, புதிதாக பெயர் மாற்றம் பெற்ற தமிழர் வர்தக சங்கத்தை 01.11.2023 அன்று லாச்சப்பல் சோதியாக் கலைக் கல்லூரியில் சந்தித்து சிநேகபூர்வமாக கலந்துரையாடிக் கொண்டனர்.
இதில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரதிநிதிகள், பொறுப்பாளர் தலைமையிலும், தமிழர் வர்த்தக சங்கப்பிரதிநிதிகள் வர்த்தக சங்கத் தலைவர் சிறிதரன் தலைமையிலும் கலந்து கொண்டனர்.
தமிழ் சமூகம் ஒன்று பட்டுச் செயற்படல் வேண்டுமென்ற நோக்கோடும், செயற்பாடுகள் வீரியமாக வெளிப்பட வேண்டுமென்ற அடிப்படையில் இக் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் ஒவ்வொருவரும் தங்கள் மனங்களில் உள்ள கேள்விகளையும், எண்ணங்களையும் ஆரோக்கியமாக பகிர்ந்து கொண்டு எதிர்காலத்தில் எப்படி இணைந்த செயற்பாட்டின் ஊடாக
எமது செயற்பாட்டுக்களின் பலாபலனின் உச்சத்தை நாம் அடையலாம் என்று விவாதித்துக் கொண்டனர். இறுதியில் இதற்கான செயற்பாட்டிற்கு பொறிமுறை ஒன்றை வகுத்து அதன்வழி இணைந்து செயற்படுவோம் என்ற முடிவு எட்டப்பட்டு, இணைந்த உறுதியும் எடுத்துக்கொள்ளப்பட்டது.