டெல்லியில் இந்த மாத தொடக்கத்திலிருந்து கடும் குளிரும், பனிமூட்டமும் நிலவுகிறது. நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலையில் குளிர் வரலாறு காணாத வகையில் இருந்தது.
2 பாகை செல்சியஸுக்கும் குறைவாக வெப்ப நிலை இருந்ததால் கடும் குளிர் வாட்டியது. இதன் காரணமாக பனிமூட்டம் புகை மண்டலம் உருவானது போல் காணப்பட்டது. 50 மீற்றர் தொலைவுக்கு எதிரே வரும் வாகனங்களும், ஆட்களும் தெரியவில்லை. குளிர் பிரதேசமான இமாச்சல பிரதேசத்தில் சிம்லா நகரில் கூட 3.8 பாகை செல்சியஸ் குளிர்தான் இருந்தது.
ஆனால் டில்லியல் அதற்கும் அதிகமாக குளிர் வாட்டியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வீதியே தெரியாத அளவுக்கு பனிமூடியதால் வாக ஓட்டிகள் வாகனங்களை செலுத்த முடியாமல் சிரமப்பட்டனர்.
விளக்குகளை எரிய விட்டவாறு ஆமை வேகத்தில் மெதுவாக வாகனங்களை செலுத்திச் சென்றனர். ஆக்ரா டெக்ரா எக்ஸ்பிரஸ் சாலையிலும் வாகனங்கள் செல்ல சிரமப்பட்டன. குளாரால் ஆஸ்பத்திரியில் நோயாளிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளானார்கள். மக்களும் வீடுகளில் முடங்கிக் கிடந்தனர். காலை 10.30 மணிக்கு மேல்தான் வெளிச்சம் தெரிய ஆரம்பித்தது. பனிமூட்டம் காரணமாக விமான சேவையும், ரயில் சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டன.
டில்லியலிருந்து புறப்பட வேண்டிய மற்றம் வந்து சேரவேண்டிய 137 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. அதேபோல் 78 ரயில்களும் தாமதமாக புறப்பட்டன.
இதனால் ரயில் நிலையங்களில் பயணிகள் கம்பளி போர்வை போர்øத்தியபடி குளிரில் நடுங்கிய நிலையில் படுத்து உறங்கினார்கள். பல ரயில்களின் நேரங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் சிரமப்பட்டனர்.