பிரான்சில் நடைபெற்ற தமிழீழ அரசியல் துறைப்பொறுப்பாளர் பிரிகேடியர். சு. ப. தமிழ்ச்செல்வன் அவர்களினதும் மற்றும் அவருடன் வீரச்சாவையடைந்த 6 வேங்கைகளின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

0
188

பிரான்சில் நடைபெற்ற தமிழீழ அரசியல் துறைப்பொறுப்பாளர் பிரிகேடியர். சு. ப. தமிழ்ச்செல்வன் அவர்களினதும் மற்றும் அவருடன் வீரச்சாவையடைந்த 6 வேங்கைகளின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும், நவம்பர் மாதம் பாரிசு மண்ணில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கேணல் பரிதி அவர்களின் நினைவையும், பாரிசின் புறநகர் பகுதியில் ஒன்றான லாக்கூர்னேவ் நகரில் அம்மாநகரத்தால் நிறுவப்பட்ட பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் அவர்களின் திருவுருவச்சிலையின் முன்பாக பிரான்சு ஆன்மாக்களின் நினைவு நாளான 01.11.2023 புதன்கிழமை இன்று நினைவேந்தல் செய்யப்பட்டது.

நிகழ்வில் பொதுச்சுடரினை லாக்கூர்னேவ் தமிழ்ச்சங்க உறுப்பினர் திருமதி. வரதராஐன் லலிதா அவர்கள் ஏற்றி வைக்க ஈகைச்சுடரினை லெப் கேணல். தமிழ்ப்பிரியாவின் சகோதரர் ஏற்றி வைக்க மலர்மாலையை கேணல் பரிதி அவர்களுடைய தயார் மாவீரர்களுக்கான மலர் மாலையை அணிவித்தனர். அகவணக்கத்தைத் தொடர்ந்து. நினைவுரைகளை மாநகர முந்நாள் ஆலோசகரும், தமிழின உணர்வாளருமாகிய நண்பருமாகிய திரு. அன்தோனி றூசெல் அவர்களும், லாக்கூர்னோவ் தமிழ்ச்சங்க தலைவர் திரு. புலோந்திரராஐh, மற்றும் மாநகர உதவி நகரபிதா, உரைகளையாற்றியிருந்தனர். மற்றும் மாநகர உறுப்பினர்களும் கலந்து கொண்டதோடு மலர், சுடர் வணக்கமும் செய்தனர்.

தொடர்ந்து அனைத்து மக்களும் சுடர் வணக்கமும், மலர்வணக்கமும் செய்ய அதனைத் தொடர்ந்து லாக்கூர்னோவ் தமிழ்ச்சோலை பழைய மாணவர், தமிழீழ மக்கள் பேரவை பொறுப்பாளர் ஆகியோர் உரைகளும் ஆற்றியிருந்தனர். நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடன், தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் தாரக மந்திரத்துடன் நிகழ்வு நிறைவுபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here