லெப். கேணல் குமரப்பா, லெப். கேணல். புலேந்திரன் உட்பட பன்னிருவேங்கைகளின் நினைவாகவும், லெப் கேணல் சந்தோஸ் அம்மான், லெப். கேணல் விக்ரர் மற்றும் லெப்கேணல் நாதன், கப்டன் கஐன் 2 ஆம் லெப் மாலதி , ஆகியோரது நினைவு சுமந்து இவிறி சூசென் நகரத்தில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
பொதுச்சுடரினை இவிறசூசென் பிராங்கோ தமிழச்சங்கத் தலைவர் திரு. சாந்தன் அவர்கள் ஏற்றிவைக்க ஈகைச்சுடரினை கப்டன் கஐன் அவர்களின் சகோதரர்கள் மற்றும் மாவீரர் குடும்பத்தினர் ஏற்றி வைத்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.
மாவீரர் பாடல் நடனம், மாவீரர் நினைவு சுமந்த பாடல்கள், கவிதைகள், இடம் பெற்றன. நினைவுரையை தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு துணைப்பொறுப்பாளர் திரு. அமுதன் அவர்கள் ஆற்றியிருந்தார்.
காலத்தின் தேவை இன்றைய சர்வதேச அரசியல் நிலைப்பாடு தமிழர் தேசத்தின் இன்றைய நிலைபற்றியும் புலம் பெயர்ந்த தமிழ்மக்கள் தாயகம் நோக்கிய பயணத்தில் தொடர்ந்தும் பயணிக்க வேண்டும் என்றும் இன்றைய நினைவேந்தலுக்குரிய மாவீரர்கள் களத்தில் எத்தனை சாதனைகளை செய்தவர்கள் என்றும் இதே போன்றே பல்லாயிரம் மாவீரர்கள் எங்களை நம்பியே மண்ணில் உறங்குகின்றார்கள் என்றும் அவர்கள் நினைவுகளைச் சுமந்து தமிழீழ மக்கள் நாம் பயணிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
நம்புங்கள் தமிழீழ பாடலுடன் தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிறைவு பெற்றது.
ஊடகப்பிரிவு – மக்கள் தொடர்பு