பிரான்சில் திறந்து வைக்கப்பட்டுள்ள 76 ஆவது பிராங்கோ தமிழ்ச்சங்கம் கனி (Gagny) .

0
235

பரிரிசின் புறநகர்ப்பகுதியில் ஒன்றான கனி (Gagny) என்னும் இடத்தில் புதிதாக கனி பிராங்கோ தமிழ்ச்சங்கம் இன்று திறந்து வைக்கப்பட்டது.  Le centre social Jacques Prevert  – Gagny   மண்டபத்தில் 28.10.2023 சனிக்கிழமை 4.00 மணிக்கு கனி பிராங்கோ தமிழ்ச்சங்கம் திறந்து வைக்கப்பட்டது. ஆரம்ப நிகழ்வாக மங்கள விளக்கு ஏற்றிவைக்கப்பட்டது. கனி மாநகர முதல்வர் M. Rolin CRANOLY, maire Jiz Kjyth,  Mme Mireille BOURRAT, adjoint M. Ashween SIVAKUMAR, adjoint      அவர்களும் வைத்தியர். திருமதி. கிருசாந்தி, கிருசாந்தன் அவர்களும், தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பின் துணைப்பொறுப்பாளர் திரு. அமுதன், தமிழ்ச்சோலை தலைமைப்பணியப் பொறுப்பாளர் திரு. நாகயோதீஸ்வரன், தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஊடகப்பிரிவு படப்பிடிப்புப் பொறுப்பாளர் திரு. யூட் கனி தமிழ்ச்சங்க நிர்வாகி திருமதி. ரா. ஜெயரூபி அவர்களும், தலைவர் திரு. தேவா மற்றும் கனி வர்த்தக நிலையப் பிரதிநிதிகளும் ஏற்றி வைத்தனர். வரவேற்பு நடனம் மாணவிகளால் நடாத்தப்பட்டது.

தொடர்ந்து முதல்வர் அவர்கள் உரையாற்றியிருந்தார். ஈழத்தமிழ் மக்களின் அரசியல் கலை பண்பாடு கலாச்சாரம் அவர்களின் மண் உணர்வும், மக்களை மதிக்கின்ற நற்பண்புகள் தான் நிறையவே தெரிந்தவர் என்றும் அதற்கு காரணம் தங்களுடைய குழந்தைகளை தாய் மொழி தமிழிலும், பண்பாட்டிலும் வளர்த்து செல்வதை தான் அறிவேன் தானும் ஒரு வம்சாவழித் தமிழன் என்றதோடு தாம் பிறந்து வளர்ந்த பிரான்சு நாட்டின் ஓர் மாநிலம் என்பதோடு அங்கு இப்பொழுது வாழும் தமிழ்ப்பராம்பரியத்தை கடைப்பிடித்து வருவதோடு, தற்பொழுது தமிழ்மொழியையும் கற்கத் தொடங்கியுள்ளனர் என்றும் தெரிவித்திருந்தார்.

இப்பிரதேசத்தில் வாழும் ஏனைய நாட்டு மக்களுக்கும் தான் முதல்வராக இருந்தாலும் தமிழ்குழந்தைகளின் தாய் மொழி தமிழ்கற்பதற்கு வாரத்தில் ஓர் நாள் முழுமையாக ஒதுக்கிக் கொடுப்பதாக தெரிவித்திருந்தார். உதவி முதல்வர் அவர்களும் பாராட்டியிருந்தார். முதல்வர் அவர்களின் உரையை தமிழில் வைத்தியர் சாலினி மொழிபெயர்த்திருந்தார். இன்றைய தமிழ்ச்சங்க திறப்பு விழாவில் கலந்து கொண்ட முக்கியஸ்தகர்கள் தமிழ்ச்சங்க உறுப்பினர்களால் பூக்கொத்துக்கள் வழங்கி மேடையில் மதிப்பளிக்கப்பட்டனர். தமிழ்ச்சங்க உறுப்பினர்கள் மக்கள் மத்தியில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

தொடர்ந்து தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் சிறப்புரையாற்றினார். இந்த மாநகரத்தில் வாழுகின்ற எமது மக்கள் தாய்மண்ணிலும், மொழியிலும், வைத்திருக்கும் பற்றை அறிவதாகவும், அதனால் தான் நீண்டகால முயற்ச்சி இன்று நிறைவேறியதும் அதற்கு பின்பலமாக இருந்த வைத்தியர் சாலினி அவர்களையும், தமிழ்சங்கத்தின் உறுப்பினர்கள் எடுத்த தொடர் முயற்ச்சி இன்று பெரும் பலனை தந்துள்ளதையும் கூறியதுடன் கனி தமிழ்ச்சங்கமும், தமிழ்ச்சோலையும், பிரான்சில் உள்ள 76 தமிழ்ச்சங்கம் போல் சிறந்து விளங்க அனைவரும் கரம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தமிழ்ச்சங்கக் கூட்டமைப்பின் துணைப்பொறுப்பாளர் திரு. அமுதன் அவர்கள் ஆற்றிய உரையில் தமிழ்சங்கங்களின் செயற்பாடுகளும், அதற்கு தாயக்கட்டமைப்பான தமிழர் ஒருங்கிணைப்புக் குழு எவ்வாறு பின்பலமாக இருந்து வருகின்றது என்றும். எம் தேசக்கட்டமைப்புக்களை அனைத்து தமிழ்மக்களும் வலிமைமிக்கதாக ஆக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து தமிழ்ச்சங்கத்தலைவர், செயலாளர் உரைகளை ஆற்றியிருந்தனர். இன்றைய தொடக்கநாளில் மட்டும் 60 வரையிலான மாணவர்கள் தமிழ்மொழி கற்பதற்கு தமது பதிவுகளை மேற்கொண்டிருந்தனர். தமிழில் கூறப்பட்ட அனைத்து விடயங்களை பிரெஞ்சு மொழியில் தமிழ்ச்சோலை மாணவி செல்வி. ஸ்தெபானி அவர்கள் அழகாக மொழியெர்ப்பு செய்திருந்ததுடன் பிரமுகர்கள் பலரின் பாராட்டுதல்களையும் பெற்றிருந்தார். 

நன்றி

ஊடகப்பிரிவு – மக்கள் தொடர்பு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here