28.10.2023 சனிக்கிழமை (ஞாயிற்றுக்கிழமை அதிகாலை) இரவோடு குளிர்காலத்துக்கான நேர மாற்றம் இடம்பெறுகின்றது.
இதன்படி 29.10.2023 ஞாயிறு அதிகாலை 3.00 மணி நேரம் 2.00 மணியாகக் குறைக்கப்படும். இந்த நேர மாற்றம் ஐரோப்பா மற்றும் பிரித்தானியாவிற்கு பொருந்துகிறது.
இந்த நேரமாற்றத்தினால் மிதிவண்டி சாரதிகள் விபத்துக்குள்ளாகலாம் என எச்சரிக்கை விடுக்கட்டுள்ளது. குளிர்காலத்தின் மாலை மற்றும் காலை வேளைகளில் மிதிவண்டிகளில் பயணிக்கும் சாரதிகள் அதிகளவில் விபத்துக்குள்ளாகின்றனர். குறிப்பாக மாலை 5 மணியில் இருந்து 7 மணிவரையான நேரத்துக்குள் 42% வீதமான மிதிவண்டி விபத்துக்கள் பதிவாகின்றன.
இதனால் மிதிவண்டியில் பயணிப்போர் மஞ்சள் மேலங்கிகள் அணிந்தும், எளிதில் அடையாளம் காணக்கூடிய வண்ணங்கள் கொண்ட உடை அணிந்தும் பயணிக்கும் படி கோரப்பட்டுள்ளனர்.