ஒரு பேனாவுக்குத்தான் எவ்வளவு சக்தி. குறுகிய காலத்திற்குள்ளேயே தமிழ் மக்களை தன எழுத்தாற்றளினால் கவர்ந்தவர் ‘ஈழமுரசு’ ஆசிரியர் கஜன் அவர்கள்.
விடுதலைக்கு வேண்டியது இன்று வெறும் பார்வையாளர்கள் அல்ல, பங்காளர்களே என்பதை அவரது பேனா மென்மையாக மக்கள் மனதில் பதியவைத்தது.
வளர்ச்சிக்காணாத எந்தக் களையும் தனித்துவம் பேணாத எந்த ஆக்கங்களும் நாளடைவில் செத்துப் போகும் என்பதை உணர்ந்த மாவீரர் கஜன் அவர்கள் சாகாத படைப்புக்களை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என உழைத்தவர்.
‘ஈழமுரசு’ பத்திரிகையின் முதலாவது இதழ் வெளிவந்தவேளை அவருடன் தொலைபேசியில் பேசும் வாய்ப்புக் கிட்டியது.
ஈழமுரசு பலதரபப்ட்ட விடையங்களையும் ஆழமாகவும் விபரமாகவும் தாங்கி வருகின்றது. (1996ம ஆண்டு வரையப்பட்ட ஆக்கம் மீள் வெளியீடாக தேசக்காற்று பதிவு செய்கின்றது) முதலாவது இதழைப் பார்க்கும் போது இதனையே பல இதழ்களாக மக்களுக்கு பிரித்துக் கொடுக்க கூடிய அளவுக்கு பல விடயங்கள் பொதிந்து இருக்கிறது என்றேன்.
அதற்கு அவர் இப்படிக் கூறினார்.
நாம் தமிழ் மக்களுக்கு நிறைய விடையங்களை நிறைவாகவும், விரைவாகவும் கொடுக்க வேண்டிய காலத்தில் இருக்கின்றோம் என்றார்.
அதன் பொருள் இப்போது விளங்கிறது. தன்னால் முடிந்ததை விரைவாக நிறைவாகப் கொடுத்து விட்டு பேனா தூக்கிய போராளியாக, மாவீரனாக மக்கள் மனதில் நிறைந்து விட்டார் கஜன் அவர்கள்.