காசா மருத்துமனைத் தாக்குதலில் 500 பேர் பலி! உலகலாவிய ரீதியில் எழும் கண்டனங்கள்!

0
109

காசாவில் உள்ள அல்-அஹ்லி அரபு மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதலில் குறைந்தது 500 பேர் கொல்லப்பட்டதாக முற்றுகையிடப்பட்ட பிரதேசத்தில் உள்ள பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்தனர்.

இத்தாக்குதலை இஸ்ரேல் மறுத்துள்ளது. காஸாவில் உள்ள இரண்டாம் பெரிய கிளர்ச்சிக் குழுவான இஸ்லாமிக் ஜிகாத் ஏவிய ஏவுகணையைத் தவறுதலாகப் மருத்துவமனையில் வீழ்ந்து வெடிப்பு ஏற்பட்டதாக இஸ்ரேல் கூறுகிறது.  இக்குற்றச்சாட்டை ஹமாஸ் மறுத்ததோடு தாக்குதலுக்கு இஸ்ரேலே காரணம் என்று கூறியுள்ளது.

மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு உலக தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பாலஸ்தீனம்

பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸின் செய்தித் தொடர்பாளர் இஸ்ரேலின் விமானத் தாக்குதலை “இனப்படுகொலை” மற்றும் “மனிதாபிமான பேரழிவு” என்று கண்டித்தார்.

இன்று புதன்கிழமை இப்பகுதிக்கு வரவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனுடனான முன்னர் திட்டமிடப்பட்ட சந்திப்பிலிருந்து அப்பாஸ் விலகியுள்ளார்.

ஜோர்டான்

இஸ்ரேலின் தாக்குதலை கடுமையாக கண்டித்தது ஜோர்டானிய வெளியுறவு அமைச்சகம். மற்றும் பாலஸ்தீனிய குடிமக்களுக்கு சர்வதேச பாதுகாப்பின் அவசியத்தையும் சண்டையை முடிவுக்கு கொண்டுவருவதையும் வலியுறுத்தியது.

காசா மருத்துவமனை மீது இஸ்ரேலின் குண்டுவெடிப்பு ஒரு “படுகொலை” மற்றும் “போர் குற்றம்” என்று மௌனமாக இருக்க முடியாது என்று மன்னர் இரண்டாம் அப்துல்லா கூறினார்.

எகிப்து

இஸ்ரேலின் தாக்குதலை எகிப்திய அரசாங்கம் கடுமையான வார்த்தைகளால் கண்டித்தது. அத்துடன் சர்வதேச சமூகத்தின் தலையீட்டுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

கத்தார்

காசா பகுதியில் மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் மக்கள்தொகை மையங்களை உள்ளடக்கிய இஸ்ரேலிய தாக்குதல்கள் விரிவடைவது ஆபத்துக்களை அதிகரித்துள்ளது என கத்தாரின் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

உலக சுகாதார அமைப்பு

மருத்துவமனை மீதான தாக்குதலை உலக சுகாதார அமைப்பு கடுமையாகக் கண்டிக்கிறது. பொதுமக்கள் மற்றும் சுகாதாரப் பாதுகாப்புக்கான உடனடிப் பாதுகாப்பு மற்றும் வெளியேற்ற உத்தரவுகளை மாற்றியமைக்க நாங்கள் அழைப்பு விடுக்கிறோம் என்று கூறியுள்ளது.

அரபு லீக்

மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில் சர்வதேச தலைவர்கள் இந்த சோகத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என அரபு லீக் தலைவர் அஹ்மத் அபுல் கெய்ட் கூறியுள்ளார்,

இக்கொடூர தாக்குதலை நடத்த என்ன மனம் இருந்திருக்க வேண்டும். அரபு வழிமுறைகள் இந்த போர்க்குற்றங்களை ஆவணப்படுத்தும் மற்றும் குற்றவாளிகள் இதிலிருந்து தப்பிக்க மாட்டார்கள் என்று அரபு லீக் சார்பாகக் கூறினார்.

துருக்கி

இந்த தாக்குதலுக்கு துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்துள்ளார். 

பெண்கள், குழந்தைகள் மற்றும் அப்பாவி பொதுமக்கள் அடங்கிய மருத்துவமனையைத் தாக்குவது, மிக அடிப்படையான மனித விழுமியங்கள் அற்ற இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு சமீபத்திய உதாரணம் என்று அவர் கூறினார்.

காசாவில் முன்னெப்போதும் இல்லாத இந்த கொடூரத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்க அனைத்து மனித இனத்தையும் நான் அழைக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

கனடா

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தத் தாக்குதலைக் கண்டித்ததோடு, போர்ச் சட்டங்களைக் கடைப்பிடிப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

காசாவில் இருந்து வெளிவரும் செய்திகள் பயங்கரமானவை மற்றும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை… சர்வதேச சட்டம் இதிலும் எல்லா சந்தர்ப்பங்களிலும் மதிக்கப்பட வேண்டும். போர்களைச் சுற்றி விதிகள் உள்ளன, மேலும் மருத்துவமனையைத் தாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ட்ரூடோ செய்தியாளர்களிடம் கூறினார்.

ஈரான்

இந்த வான்வழித் தாக்குதலை நிராயுதபாணி மற்றும் பாதுகாப்பற்ற மக்கள் மீதான தாக்குதல் என்று கண்டித்துள்ளது ஈரானின் வெளியுறவு அமைச்சகம் கண்டித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை

காசாவில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மீது நடத்தப்பட்ட போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததையிட்டு நான் திகிலடைவதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படுகிறார்கள்” என்று குட்டெரெஸ் எழுதினார். எனது இதயம் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் உள்ளது என்று எக்ஸ் தளத்தில் எழுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here