1,300 பேரை கொன்ற ஹமாஸை கண்டிப்பாக இஸ்ரேல் பழிதீர்க்க வேண்டும்! ஆனால் ஆக்கிரமிப்பது மிகப்பெரிய தவறு..ஜோ பைடன் பரபரப்பு பேச்சு!

0
114

ஹமாஸின் ஆரம்ப கால தாக்குதலுக்கு இஸ்ரேல் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளார்.

இஸ்ரேல் பயணம்

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நீடித்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேலுக்கான பயணம் குறித்து ஆலோசித்து வருகிறார். 

joe-biden-concern-about-palestine-people 

பைடன் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்க அதே சமயம், காசா பகுதியில் இஸ்ரேலின் நீண்டகால ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் எச்சரிக்கை செய்தார். 

joe-biden-concern-about-palestine-people 

பாலஸ்தீனிய மக்களுக்கும் ஆதரவு

மேலும் நேர்காணல் ஒன்றில் பேசிய ஜோ பைடன், ’30 அமெரிக்கர்கள் உட்பட குறைந்தது 1,300 பேரைக் கொன்ற ஹமாஸின் ஆரம்ப தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேல் பதிலடி கொடுக்க வேண்டும்.

அதேசமயம் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவதைத் தவிர்க்க இஸ்ரேலியர்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்யப்போகிறார்கள். இஸ்ரேல் போர் விதிகளின்படி செயல்படும். அப்பாவி மக்களுக்கு உணவு, மருந்து, தண்ணீர் ஆகியவை கிடைக்க வேண்டும்.

ஆனால், இஸ்ரேல் நீண்ட காலப் பகுதியை கட்டுப்படுத்த வேண்டும் என்று நான் நம்பவில்லை. ஆக்கிரமிப்பு என்பது மிகப்பெரிய தவறு. அந்தப்பகுதி (காசா) பாலஸ்தீனிய அதிகாரத்தால் ஆளப்பட்ட வேண்டும். காஸாவில் நடந்தது ஹமாஸ் மற்றும் ஹமாஸின் தீவிர கூறுகள் அனைத்து பாலஸ்தீனிய மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை’ என தெரிவித்தார்.

இஸ்ரேலுக்கு ஆதரவு அளித்து வந்த ஜோ பைடன், தற்போது பாலஸ்தீனிய மக்களுக்கு ஆதரவாகவும் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

joe-biden-concern-about-palestine-people

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here