4.1023 சனிக்கிழமை லெப்.மாலதியின் நிகழ்வு உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.
யாழ். மாவட்டம் கோப்பாய் பகுதியில் 10.10.1987 அன்று இந்தியப் படையினருடனான நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட விடுதலைப்போரில் முதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி ஆவார் .
மண்டபம் நிறைந்த மக்களுடன் பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமானது. பின்பு தமிழீழத் தேசியக்கொடி ஏற்றிவைக்கப்பட்டு ஈகைச்சுடர் ஏற்றி திருவுருவப்படத்துக்கு மலர்மாலை அணிவித்து சுடர்ஏற்றி மலர்தூவி வணக்க நிகழ்வு முடிந்தபின் அகவணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமானது.
தொடர்ந்து விடுதலை நடனங்கள் விடுதலைப் பாடல்கள்,கவிதை,வில்லுப்பாட்டு,சிறப்புரையுடன்இறுதியில் தேசியக்கொடி இறக்கிவைக்கப்பட்டு,நம்புங்கள் தமிழீழம் என்ற பாடலுடன் தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் என்ற தாயக மந்திரத்துடன் நிறைவு பெற்றது.