உயர் எச்சரிக்கையில் பாரிஸ் நகரம்… முக்கிய பகுதிகளில் இருந்து மக்கள் அவசரமாக வெளியேற்றம்!

0
73

பாரிஸ் நகரில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், லூவ்ரே மற்றும் வெர்சாய்ஸ் அரண்மனை பகுதிகளில் இருந்து பார்வையாளர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

பாரிஸ் நகரம் உயர் எச்சரிக்கையில்

மட்டுமின்றி, Gare de Lyon ரயில் நிலையத்தில் இருந்தும் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் பாரிஸ் நகரம் முழுவதும் உயர் எச்சரிக்கையில் வைக்கப்பட்டுள்ளது.

உயர் எச்சரிக்கையில் பாரிஸ் நகரம்... முக்கிய பகுதிகளில் இருந்து மக்கள் அவசரமாக வெளியேற்றம் | String Of Bomb Threats Paris On High Alert

வெள்ளிக்கிழமை பாடசாலை ஒன்றில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தை அடுத்தே நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி மதியத்திற்கு மேல், லூவ்ரே அருங்காட்சியகத்தில் எச்சரிக்கை மணி ஒலிக்க விடப்பட்டது.

அதன் சுரங்கப்பகுதி வணிகவளாகத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதனையடுத்து பார்வையாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

லூவ்ரே நிர்வாகிகள் தரப்பு தெரிவிக்கையில், குறித்த சம்பவத்தில் எவரும் காயம்படவில்லை என குறிப்பிட்டுள்ளனர். தொடர்ந்து பாரிஸ் நகர பொலிசார் பாதுகாப்பு நடவடிக்கையில் களமிறக்கப்பட்டனர்.

உயர் எச்சரிக்கையில் பாரிஸ் நகரம்... முக்கிய பகுதிகளில் இருந்து மக்கள் அவசரமாக வெளியேற்றம் | String Of Bomb Threats Paris On High Alert

அத்துடன், அருங்காட்சியகம் மொத்தமாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதனிடையே, வெர்சாய்ஸ் அரண்மனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

முகமது என்ற செச்சென் அகதி

இதனையடுத்து, பார்வையாளர்கள் மொத்தமாக வெளியேற்றப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் இதுவரை விளக்கம் ஏதும் அளிக்கவில்லை. வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பாடசாலை தாக்குதல் சம்பவத்தை அடுத்து 7,000 ராணுவத்தினர் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக களமிறக்கப்பட்டனர்.

மத அடிப்படைவாதி இளைஞர் ஒருவரால் Dominique Bernard என்ற ஆசிரியர் கத்தியால் தாக்கி கொல்லப்பட்டார். பிரான்சில் நடந்த கொடூரமான இந்த சம்பவம் தற்போது பிரெஞ்சு பயங்கரவாத எதிர்ப்பு பொலிசாரால் விசாரிக்கப்பட்டு வருகிறது.உயர் எச்சரிக்கையில் பாரிஸ் நகரம்... முக்கிய பகுதிகளில் இருந்து மக்கள் அவசரமாக வெளியேற்றம் | String Of Bomb Threats Paris On High Alert

மேலும், இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போரினால் பிரான்சில் இதுப்போன்ற தாக்குதல் சம்பவங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் அஞ்சப்படுகிறது. 20 வயதான தாக்குதல்தாரி ஐ.எஸ் ஆதரவு இளைஞர் எனவும், முகமது என்ற செச்சென் அகதி எனவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here