அனைத்து பாலஸ்தீனியர்களும் 24 மணி நேரத்திற்குள் வடக்கு காசாவை காலி செய்ய வேண்டும் என்று இஸ்ரேல் கூறியது. இந்த அறிவிப்பால் சுமார் 1.1 மில்லியன் மக்கள் கட்டாய இடப்பெயர்வை நோக்கித் தள்ளப்பட்டனர்.
காஸாவில் 5 பகுதிகளில் சுமார் 2.3 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். அவை வடக்கு காசா, காசா நகரம், டெய்ர் எல்-பாலா, கான் யூனிஸ் மற்றும் ரஃபா என்பவாகும்.
மத்திய தரைக்கடல் கடற்கரையில் இஸ்ரேல் மற்றும் எகிப்தின் எல்லையில், இந்த துண்டு சுமார் 365 சதுர கிலோமீட்டர் (141 சதுர மைல்கள்) கொண்டதே காசாப் பகுதியாகும்.
41கிமீ (25 மைல்) நீளத்தில், தெற்கில் உள்ள ரஃபாவிலிருந்து வடக்கே பெய்ட் ஹனூனுக்கு பயணிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கும் குறைவான நேரமே எடுக்கும்.
இதேநேரம் உங்கள் வீடுகளில் உறுதியாக இருங்கள் என்று ஹமாஸ் பாலஸ்தீனிய மக்களுக்கு அறிவித்துள்ளது. இஸ்ரேலின் வெளியேற்றும் எச்சரிக்கைக்குள் விழ வேண்டாம் என ஹமாஸ் அப்பகுதி மக்களை வலியுறுத்தியுள்ளது.
அத்துடன் அகதிகள் விவகாரங்களுக்கான ஹமாஸ் ஆணையம் வடக்கில் வசிப்பவர்களிடம் உங்கள் வீடுகளில் உறுதியாக இருங்கள் மற்றும் ஆக்கிரமிப்பினால் நடத்தப்படும் இந்த அருவருப்பான உளவியல் போரை எதிர்கொண்டு உறுதியாக நிற்க வேண்டும் என்று கூறியது.
இப்போரில் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகள்
காசா
கொல்லப்பட்டவர்கள்: 1,537
காயமடைந்தவர்கள்: 6,612
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை
கொல்லப்பட்டவர்கள்: 31
காயமடைந்தவர்கள்: 600
இஸ்ரேல்
கொல்லப்பட்டவர்கள்: 1,300
காயமடைந்தவர்கள்: 3,200