இந்திய இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட கொக்குவில் பிரம்படி படுகொலையின் 36 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
1987 ஆம் ஆண்டு இதே மாதம் பதினோராம் பன்னிரண்டாம் திகதிகளில் கொக்குவில் பிரம்படி பகுதியில் 50 இற்கும் மேற்பட்ட பொது மக்களை கொடூரமாக இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்தப் படுகொலையின் 36 ஆவது நினைவு தினம் நல்லூர் பிரதேச சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள், மற்றும் இறந்தவர்களின் உறவுகளால் நினைவு கூறப்பட்டது.
இதன்போது வீதியோரமாக அமைந்துள்ள நினைவு தூபியில் சுடரேற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்வில் சமூக செயற்பாட்டாளர் மு.தமிழ்மணி படுகொலை தொடர்பான நினைவு உரையை நிகழ்த்தினார்.