ஆப்கானிஸ்தானில் இன்று(7) பதிவான நிலநடுக்கத்தில் 14 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் 78 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் மேற்குப் பகுதியில் உள்ள ஹெராத் நகரில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பகுதியை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.
இன்று காலை 11 மணியளவில் 5.5 ரிக்டர் அளவுகோலில் முதல் நிலநடுக்கம் பதிவாகியிருந்தது. இதனை தொடர்ந்து, 4.7, 6.3 மற்றும் 4.6 ஆகிய ரிக்டர் அளவுகோள்கலில் மூன்று நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.
இந்த நிலநடுக்கங்கள் காரணமாக பல்வேறு கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதுடன், பல கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன், ஹெராத் நகரிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரையில்14 பேர் உயிரிழந்துள்ளதுடன், 78 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும், இன்றைய தினம் பதிவான நிலநடுக்கங்கள் காரணமாக சாலைகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.