தமிழரின் தொன்மையைத் தனது ஆய்வுகளால் வெளிப்படுத்திய கடல்சார் ஆய்வாளர் ஒரிசா பாலு காலமானார். பல தமிழர் வரலாற்றுத் தொன்மை ஆய்வுத் தரவுகள் இவரோடு இன்னமும் புதைந்து விட்டன.
குமரி கண்டம், லெமூரிய கண்டம் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டவர். ஆமைகள் மூலமாக நீரோட்டத்தை அறிந்து பழங்கால தமிழர்கள் கடல் பயணம் மேற்கொண்டதை அறிந்தவர் ஆவார்.