நெவர் பிராங்கோ தமிழ்ச் சங்கமும் நெவர் தமிழ்ச் சோலையும் இணைந்து இன்று (30-09-2023) பள்ளி மண்டபத்தில் மாலை 3.00 மணிக்கு தியாகதீபம் லெப்.கேணல் திலீபனின் 36 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
லெப்.கேணல் திலீபனின் திருவுருவப்படத்திற்கு நவரட்ணம் நவநீதன் அவர்கள் பொதுச்சுடரினை ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து ஈகைச்சுடரினை ஏற்றி வைத்த, பின்பு அணையாத தீபமாம் லெப்.கேணல் திலீபனுக்கு அலோசியஸ் அன்ரனி யூலியஸ் அவர்கள் மலர் வணக்கம் செலுத்தினார். அடுத்து மாணவி நவநீதன் கன்சிகா அவர்களால் அகவணக்கம் செலுத்தப்பட்டது.
பின்பு பாடல் இசைக்கப்பட பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் சுடர் வணக்கம் மலர் வணக்கம் செலுத்தினார்கள். அதனைத் தொடர்ந்து தனிமனித சரித்திரமாம் திலீபனின் வாழ்க்கை வரலாற்றை மாணவிகள் வசிகரன் லிபிசானி, அர்ச்சுணராசா கலைமதி போன்றோர் எடுத்தியம்பினார்கள்.
பின்பு ‘சாவினைத் தோள்மீது…’எனும் எழுச்சி பாடலை மாணவன் றெக்னோஷன் அவர்கள் இசைத்தார். பின்னர் ‘வானத்தில் இருந்து திலீபன் சொல்கிறார்’ எனும் எழுச்சி பாடலுக்கு வளர்தமிழ் 08 இல் கல்வி பயிலும் மாணவிகள் நடனமாடினார்கள். பின்பு ‘வெல்லும் வெல்லும் திலீபனின் தியாகம் வெல்லும்’ எனும் தலைப்பில் திருமதி நிரோஷா, திருமதி அனுசியா, செல்வி கரிசினி போன்றோர் கவிதை வடித்தார்கள் பின்னர் மாலை 5.30 மணியளவில் “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” என்னும் தாரக மந்திரத்துடன் நிறைவு பெற்றது.