நாட்டுப்பற்றாளர் சந்திரராசா அகிலன் அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு 30-09-2023!

0
289

பிரான்சில் நடைபெற்ற நாட்டுப்பற்றாளர் சந்திரராசா அகிலன் அவர்களின்  இறுதிவணக்க நிகழ்வு 30.09.2023 பாரிசின் புறநகர் பகுதியில் ஒன்றான சார்சல் மாநகரத்தில்ESPACE VENISE 30,Route de Groslay 95200 Sarcelles 

 மண்டபத்தில் நடைபெற்றது . காலை 10.30 மணிக்கு புகழுடல் தமிழ்ச்சோலை மாணவர்களின் முழவு இசையுடனும் தமிழீழத் தேசியக்கொடியுடனும் மண்டபத்திற்கு எடுத்து வரப்பட்டது. அதன் பின்னால் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அனைத்துக் கட்டமைப்பினர், தமிழ்ச்சோலை தலைமைப்பணியகத்தினர், தமிழ்சங்க உறுப்பினர்கள், தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினர், தமிழ்ச்சோலை நிர்வாகிகள், ஆசிரியர்கள் மாணவர்கள் அணிவகுத்து மண்டபத்திற்கு வந்துகூடினர். ஈகைச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டது. நாட்டுப்பற்றாளர் ச. அகிலனின் துணைவியார் ஏற்றி வைக்க, மலர் வணக்கத்தையும் அகிலன் அவர்களின் பிள்ளைகள் செய்திருந்தனர். தொடர்ந்து அகவணக்கம் இடம் பெற்றது. தமிழ்ச்சோலைக்கீதம் சோதியா கலைக்கல்லூரி மாணவர்களாலும், லாக்கூர்னோவ் தமிழச்சோலை மாணவர்களாலும் இசைக்கப்பட்டது. நாட்டுப்பற்றாளர் ச.அகிலன் அவர்கள் பணிபற்றிய சிறப்புக்காணொளி காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து தாயகம் நோக்கியும், கல்வியிலும் அயராது பணியாற்றி சாவடைந்த அகிலன் அவர்களுக்கு தமிழீழ விடுதலைப்புலிகளின் அனைத்துலகத் தொடர்பகம் நாட்டுப்பற்றாளர் என்ற மதிப்பளித்தலை வழங்கியும், அவரின் திருவுருவப்படம் வைக்கப்பட்டு, அவரின் புகழுடலுக்கு தமிழீழத் தேசியக் கொடி தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையாலும், பெண்கள் அமைப்பினராலும் போற்றப்பட்டது. அனைத்துலக தொடர்பக அறிக்கையினை திரு. ரூபன் அவர்கள் வாசித்தளித்திருந்தார். தொடர்ந்து தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு அறிக்கை பரப்புரைப் பொறுப்பாளர் திரு. மேத்தா அவர்களால் வாசிக்கப்பட்டது. தொடர்ந்து தமிழ்ச்சோலைத் தலைமைப்பணிய அறிக்கையினை தமிழ்ச்சோலைத் தலைமைப்பணிய செயலாளர் திரு காணிக்கை நாதன் வாசித்திருந்தார். தொடர்ந்து தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை அறிக்கையினை அதன் மேலாளர் திருமதி. ந. அரியரட்ணம் அவர்கள் ஆற்றியிருந்தார். அதனைத் தொடர்ந்து  சமவேளையிலே கட்டமைப்பினர், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் மலர்வணக்கத்தை செய்ய தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் அனைத்துக்கட்டமைப்பின் பொறுப்பாளர்கள் தமது கண்ணீர் வணக்க உரைகளை ஆற்றியிருந்தனர். தமிழர் புனர்வாழ்வுக்கழகம் பொறுப்பாளர் திரு. சுந்தரவேல், தமிழர் வர்த்தக சங்கப்பிரதிநிதியாக தலைவர் திரு. சிறீதரன் அவர்கள், லாக்கூர்னோவ் முதல்வர் அவர்கள், மற்றும் 95 மாவட்ட முந்நாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு. பொப்புனி அவர்கள், மற்றும் திறான்சி மாநகர ஆலோசகர் திரு. அலன் ஆனந்தன் , லாக்கூர்னோவ் மாநகர சபை முந்நாள் ஆலோசகர் தமிழின விடுதலைப்பற்றாளர் திரு. அந்தோனி றூசெல் அவர்களும், பிரித்தானியா, டென்மார்க் யேர்மனி நாட்டிலிருந்து வருகை தந்தவர்களும் உரைகளையும், கவிதைகளை வழங்கினர். 25 தற்கும் மேற்பட்ட தமிழ்ச்சோலைகள் மலர் வளையங்கள் பூக்கொத்துகளுடன் கண்ணீருடன் கதறியழுதனர். பெரியமாணவர்கள், ஆசிரியர்கள், செயற்பாட்டாளர்கள் என 700 மேற்பட்டோர் கண்களில் கண்ணீர் சொரிய கனத்த இதயத்துடன் நின்றிருந்தனர். அன்னாரின் பிள்ளைகள் தனது தந்தையுடன் தாம் இருந்த நிழற்படங்களை வீடியோ விவரணமாக காட்டியிருந்தனர். இவரிடம் கல்விகற்றவர்கள் தம்மை ஒரு சகோதரனாக, தந்தையாக நல்ல ஆசானாக வழிநடத்தியதை கண்ணீருடன் கூறினர். குடும்பத்தின் இரங்கல் உரை இடம் பெற்றது. அவரின் புகழ் உடல் எதிர்வரும் 02.10.2023 திங்கட்கிழமை ஒபவில்லியே பந்தன் துயிலும் இல்லத்தில் பிற்பகல் 15.00 16.30 வரையான நேரத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here