கஜேந்திரகுமார்- பின்லாந்து மனித உரிமைகளிற்கான சிறப்புத்தூதுவருக்குமிடையே சந்திப்பு!

0
194

பின்லாந்து  மனித உரிமைகளிற்கான சிறப்புத்தூதுவர் தீனா ஜோர்டிக்காவிற்கும், (Tiina jortikka) தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களிற்குமிடையில் சிறப்புச் சந்திப்பு ஒன்று வியாழக்கிழமை (28) இடம்பெற்றது. 

அனைத்துலக இராஜதந்திர கட்டமைப்பின் (IDCTE) ஒழுங்கமைப்பில், பின்லாந்து தேசத்தின், மனித உரிமைகளிற்கான சிறப்புத் தூதுவர் தீனா ஜோர்டிக்காவிற்கும்,(Tiina jortikka) தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களிற்குமிடையில் சிறப்புச் சந்திப்பு ஒன்று வியாழக்கிழமை (28) இடம்பெற்றுள்ளது.

இச்சந்திப்பில் , சிறிலங்கா அரசினால் தமிழர் பிரதேசங்களில் நடாத்தப்படும்,  திட்டமிட்ட மனிதவுரிமை மீறல்கள் ,  சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பாக காத்திரமான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

தமிழர் தாயகத்தில் நடைபெறும் மனிதவுரிமை சார்ந்த விடயங்களை,  ஐரோப்பிய ஒன்றியமும் பின்லாந்தும் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும், தமிழ் மக்கள் அமைதியான பாதுகாப்பான வாழ்க்கை வாழ்வதையே தாமும் விரும்புவதாகவும், ரீனா ஜோர்டிக்கா அவர்கள் மேலும் தெரிவித்தார்.

பின்லாந்து தேசத்தில் தற்போது தங்கிநிற்கும்  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள்  இன்றும் நாளையும் வெளிநாட்டு அமைச்சுப் பிரதிநிதிகளுடனும், அரச, அரசசார்பற்ற அமைப்புகளின் பொறுப்பு வாய்ந்த மேலாளர்களுடனும், பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளார்.

இச்சந்திப்புகளினூடாக தமிழர் தாயகத்தில், சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்படும்  சட்டவிரோத நடவடிக்கைகளையும். மனிதவுரிமை மீறல்களையும் ஆதார பூர்வமாக விளக்கவுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here