போயா தினத்தை முன்னிட்டு முன்னணியினால் காங்கேசன்துறையில் முன்னெடுக்கப்படும் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
காங்கேசன்துறை யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு பகுதியின் அதிவுயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட இடமே தையிட்டி .இந்த தையிட்டியில் ஒரு பகுதி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விடுவிக்கப்பட்டிருந்தது.
இந்த பகுதியில் தமிழர்களுக்கு சொந்தமான இடங்கள் இன்றும் பாதுகாப்பு தரப்பினர் வசம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு மக்களுக்கு சொந்தமான இடங்களை அக்கிரமித்து, படையினர் பௌத்த விகாரையொன்றை அமைத்துள்ளதாக குற்றம் சுமத்தப்படுகின்றது.
மக்களின் நிலங்களை அக்கிரமித்து, பௌத்த விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, போயா நாட்களில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்த விகாரையை நிர்மாணிப்பதற்காக ராணுவத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிக்குமாறும், தமிழர் பகுதிகளில் பௌத்த மயமாக்கலை நிறுத்துமாறும் வலியுறுத்தி இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.