தமிழீழ தேசிய மாவீரர்நாள் நவம்பர் 27 ஆம் நாள் பிரான்சில் எழுச்சி பூர்வமாக நடைபெற ஏற்பாடாகியுள்ள நிலையில் அதன் விபரமடங்கிய துண்டுபிரசுரங்கள் பிரான்சில் எம்மவர்களின் வணிகத்தலங்களில் ஒட்டப்பட்டுவருகின்றன.
77 மாவட்டம் செல் பகுதியிலும், மற்றும் 93 மாவட்டங்கள் திறான்சிப் பிரதேசத்திலும் வர்த்தகநிலையங்களில் காணப்படுவதுடன். வர்த்தகர்களும் வழமையான ஆண்டுகளைவிட தமது பொருளாதாரப்பங்களிப்பையும் அதிகமாகச் செய்தும் வருகின்றனர்.