அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்க :திரண்டெழுந்து மன்னாரில் போராட்டம்!

0
473
அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை(10) காலை மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
தீபத்திருநாளான இன்று அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி அரசியல் கைதிகளின் உறவினர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஆகியோர் இணைந்து குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டனர்.
mannar-disappear-4-600x401மன்னார் பிரஜைகள் குழவின் தலைவர் அருட்தந்தை இம்மானுவேல் செபமாலை அடிகளார் தலைமையில் இடம் பெற்ற குறித்த கவனயீர்ப்பு போராட்டம் மன்னார் செபஸ்தியார் பேராலயத்தில் காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகி மன்னார் பிரதான வீதியூடாக சென்று மன்னார் மாவட்டச் செயலக வீதியை சென்றடைந்தது.
பின் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் ஒன்று கூடிய அரசியல் கைதிகளின் உறவினர்கள் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி கோசங்களை எழுப்பினர்.
அரசியல் கைதிகளை கடந்த 7 ஆம் திகதிக்குள் விடுதலை செய்வதாக அறிவித்த ஜனாதிபதி இது வரை அவர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாத நிலையில் உள்ளதாக அரசியல் கைதிகளின் உறவினர்கள் கவலை தெரிவித்தனர்.mannar-disappear-7-600x401
ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் அரசியல் கைதிகள் உற்பட நல்லாட்சி ஏற்படும் என்ற நம்பிக்கையுடன் இலங்கை மக்கள் குறிப்பாக வடக்கு மக்கள் ஆட்சி மாற்றத்திற்காக பாடுபட்டனர்.
அந்த வகையில் இந்த நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள போது அந்த அரசாங்கமும் கல்நெஞ்சம் கொண்டு செயற்படுவதாக அரசியல் கைதிகளில் உறவினர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
mannar-disappear-10-600x401
எனவே விசாரனைகள் இன்றி பல வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலநாதன், வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலா நிதி ஜீ.குணசீலன், இலங்கை தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் வி.எஸ்.சிவகரன், மன்னார் நகர சபையின் முன்னாள் உறுப்பினர் இ.குமரேஸ், பிரபல சட்டத்தரணி அன்ரன் புனித நாயகம் மற்றும் மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள், அருட்தந்தையர்கள், மன்னார் பிரஜைகள் குழுவின் பிரதி நிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்ததோடு வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் அரசியல் கைதிகளின் உறவினர்கள் குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
 mannar-disappear-5-600x401 mannar-disappear-6-600x401 mannar-disappear-8-600x401 mannar-disappear-9-600x401

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here